புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அடுத்த சூப்பர் ஸ்டாராக பிளான் போடும் விஜய்.. சத்தம் இல்லாமல் தளபதி இடத்தை பறிக்கும் நடிகர்

எப்போதுமே நடிகர்களுக்குள் ஒரு தொழில் போட்டி இருப்பது சகஜம் தான். ஆனால் உச்ச நட்சத்திரமாக இருக்கும் சூப்பர் ஸ்டாரின் இடத்தை பிடிக்க வேண்டும் என்பது பல நடிகர்களின் கனவாக இருக்கிறது. அந்த வகையில் விஜய்க்கு இந்த ஆசை கொஞ்சம் அதிகமாக இருப்பதாக சமீப காலமாகவே ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது.

அதற்கேற்றார் போல் சமீபத்தில் நடந்த வாரிசு திரைப்பட விழாவிலும் விஜய்யை அடுத்த சூப்பர் ஸ்டார் என பலரும் பாராட்டினர். இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் தற்போது சத்தமே இல்லாமல் ஒரு நடிகர் விஜய்யின் இடத்தை பிடிக்கும் வகையில் முன்னேறிக் கொண்டிருக்கிறார். கோலிவுட் திரையுலகை பொருத்தவரை ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக விஜய்யின் திரைப்படங்களுக்கு நல்ல மவுசு இருக்கிறது.

Also read: லியோவை ப்ரீ பிசினஸில் முந்திய சூர்யா 42.. உண்மை நிலவரத்தை போட்டு உடைத்த தயாரிப்பாளர்

அதனாலேயே அவருடைய திரைப்படங்கள் ரிலீசுக்கு முன்பே கோடிக்கணக்கில் கல்லா கட்டிவிடும். அதை முறியடிக்கும் வகையில் தற்போது சூர்யா 42 திரைப்படமும் நல்ல வியாபாரம் ஆகி உள்ளது. இப்படி ஒவ்வொரு நடிகரும் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படமும் 100 கோடி வரை வியாபாரம் ஆகி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

சின்னத்திரையில் இருந்து வந்து தற்போது தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத நடிகராக மாறி இருக்கும் இவருக்கு பெண்கள் முதல் குழந்தைகள் வரை ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த பிரின்ஸ் திரைப்படம் தோல்வியை கொடுத்திருந்தாலும் தற்போது மாவீரன் திரைப்படத்தை வாங்குவதற்கு சாட்டிலைட் மற்றும் ஓடிடி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறதாம்.

Also read: இருவரின் பிரிவை தாங்க முடியாத நடிகை.. யாரு கண்ணு பட்டுச்சோ மேடையிலேயே கண்கலங்கிய ரஜினி

அந்த வகையில் ரிலீஸுக்கு முன்பே பல கோடி கல்லா கட்டியிருக்கும் சிவகார்த்திகேயன் தோல்வி படங்களை கொடுத்தாலும் அவருடைய இடத்தை நிரந்தரமாகவே தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் பாக்ஸ் ஆபிஸ் ஹீரோவாகவும் இவரை கொண்டாடி வருகின்றனர். அதனாலேயே இவரை அடுத்த விஜய் என்று பலரும் கூறுகின்றனர்.

அதை உண்மையாகுவது போல் அவர் சத்தம் இல்லாமல் டாப் இடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார். இவ்வாறு விஜய் சூப்பர் ஸ்டார் இடத்தை நோக்கி குறி வைத்திருக்கும் நிலையில் அவருடைய இடத்தை சிவகார்த்திகேயன் பிடித்துள்ளார். இதனால் விஜய்யின் மார்க்கெட் குறைய கூட வாய்ப்பிருப்பதாகவும் திரையுலக வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Also read: ஒரு லிமிட் மெயின்டெயின் பண்ணும் உதயநிதி.. இன்று வரை விஜய் உடன் நெருங்காத ரகசியம்

Trending News