திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ஆசை தம்பியாவது விஜய்யை காப்பாற்றி இருப்பார்.. தேரை இழுத்து தெருவில் விட்ட லோகேஷ்

Lokesh-Vijay: லோகேஷ் இயக்கத்தில் மிகப்பெரிய அளவில் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருந்த லியோ இன்று வெளியாகி உள்ளது. பாராபட்சம் பார்க்காமல் பல முன்னணி பிரபலங்களையும் இதற்குள் இழுத்து வந்த அவர் ட்ரெய்லரின் போதே உச்சகட்ட சர்ச்சைகளை சந்தித்தார். இதனால் விஜய்க்கும் அவப்பெயர் கிடைத்தது.

ஆனால் அதெல்லாம் படம் வெளியானால் மறைந்து விடும் என ரசிகர்கள் ஆசுவாசப்படுத்தி வந்தனர். ஆனால் அதைவிட அதிகமாக இப்போது லியோ விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் எல்.சி.யு மீது அவர்கள் வைத்திருந்த அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பு தான்.

எப்படியும் இப்படத்திற்குள் முந்தைய கதாபாத்திரங்கள் வந்துவிடும் என்று அவர்கள் ஆசையுடன் காத்திருந்தனர். ஆனால் அதில் பாதியை கூட லோகேஷ் நிறைவேற்றவில்லை. ஏதோ எல்.சி.யு கனெக்ட் செய்ய வேண்டுமே என்று கடமைக்கு காட்சிகளை வைத்தது போல் இருந்ததாக ஆடியன்ஸ் வேதனையுடன் பகிர்ந்து வருகின்றனர்.

இப்படி பல விஷயங்களில் லோகேஷ் கோட்டை விட்டிருப்பது அதிர்ச்சியாக தான் இருக்கிறது. இதற்கு பேசாமல் விஜய் அட்லி கூடவே கூட்டணி அமைத்திருக்கலாம் என்ற ஒரு கருத்தும் இப்போது பூதாகரமாக கிளம்பி வருகிறது. ஏனென்றால் வாரிசுக்கு பிறகு இவர்களின் கூட்டணி தான் இணையும் என்று பேசப்பட்டது.

ஆனால் விக்ரமின் தாறுமாறு வெற்றி, ஏற்கனவே மாஸ்டர் கொடுத்த ஹிட் என விஜய் லோகேஷ் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்து இதில் களமிறங்கினார். அதற்கு ஏற்றார் போல் அவர் பல காட்சிகளில் ரிஸ்க் எடுத்தும் நடித்திருக்கிறார். அப்படி இருந்தும் கூட தற்போது கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் ஆசை தம்பி அட்லியாவது விஜய்யை காப்பாற்றி இருப்பார். ஆனால் லோகேஷ் இப்படி தேரை இழுத்து தெருவில் விட்டுவிட்டாரே என விஜய் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். இருப்பினும் லோகேஷ் இந்த அளவுக்கு படம் எடுக்கக் கூடியவர் அல்ல. ஏதோ ஒன்று நடந்திருக்கிறது. அதனாலயே லியோ இரண்டாம் பாதி முதல் பாதியில் இருந்து வித்தியாசப்பட்டு நிற்கிறது என்ற விமர்சனமும் இப்போது வெளிவந்து கொண்டிருக்கிறது.

Trending News