வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

காவிரியிடம் காதலை சொல்ல முடியாமல் தவிக்கும் விஜய்.. வெண்ணிலாவை வைத்து ராகினி ஆட போகும் ஆட்டம்

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், விஜய் மற்றும் காவேரி ஒருத்தரை ஒருத்தர் பிடிக்காமல் சந்தர்ப்ப சூழ்நிலையில் ஒரு வருட ஒப்பந்தத்தின்படி கல்யாணம் பண்ணி இருக்கிறார்கள். ஆனால் கல்யாணம் பண்ணிட்டு ஒரே வீட்டில் இருக்கும் இவர்கள் இருவரும் மனதிற்குள் தற்போது காதல் வந்துவிட்டது. அந்த வகையில் விஜய் இல்லாமல் காவிரியால் இருக்க முடியாது. அதே மாதிரி காவிரி இல்லாத வாழ்க்கை விஜய் நினைத்துக் கூட பார்க்க முடியாது.

இப்படி மனம் ஒத்தும் தம்பதிகளாக வாழும் இவர்களுக்குள் ஒரு புயல் மாதிரி வெண்ணிலா என்டரி ஆகியிருக்கிறார். அதாவது வெண்ணிலா மற்றும் விஜய் இருவரும் காதலித்து வந்த நிலையில் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இவர்கள் பிரிந்து போய்விட்டார்கள். இதனால் தயக்கத்துடன் இருக்கும் விஜய், முழுமனதுடன் காவிரியை ஏற்றுக்க முடியாமல் தவிக்கிறார்.

புயலாக நுழைந்திருக்கும் வெண்ணிலா

இருந்தாலும் காவேரி, விஜய் குடும்பத்துடன் பழகும் விதமும் விஜய்க்காக செய்யும் ஒவ்வொரு விஷயங்களும் விஜய் மனதிற்குள் காதல் நுழைந்து விட்டது. இப்படி கொஞ்சம் கொஞ்சமாக விஜய், காவேரியை காதலிக்க ஆரம்பித்து விட்டார். எப்படியாவது காதலை சொல்ல வேண்டும் என்று நினைக்கும் இந்த சந்தர்ப்பத்தில் வெண்ணிலாவின் ஞாபகங்கள் விஜய்க்கு வந்துட்டு போகிறது.

அந்த வகையில் காவேரி, அனாதை ஆசிரமத்திற்காக பணம் மற்றும் அப்பள கட்டு கொடுக்கப் போகிறார். போன இடத்தில் எதிர்ச்சியாக வெண்ணிலவை சந்திக்கும்படியாக வாய்ப்பு வருகிறது. ஆனால் காவேரி இதுவரை வெண்ணிலாவை பார்த்ததில்லை என்பதால் அவரைப் பற்றி மட்டும் விசாரித்துவிட்டு கிளம்பி விடுகிறார்.

பிறகு வீட்டிற்கு போனதும் விஜய் இடம் ஆசிரமத்தில் ஒரு பொண்ணு எல்லாத்தையும் மறந்து தவிக்கிறது என்பதை சொல்லப் போகிறார். ஆனாலும் விஜய் இதை பெரிதாக கண்டு கொள்ளாமல் போய் விடப் போகிறார். இதனை தொடர்ந்து காவிரியிடம் காதலை சொல்ல நினைக்கும் விஜய் குற்ற உணர்ச்சியால் தவிக்கிறார்.

இதற்கிடையில் மொத்தமாக இவர்களிடம் தோற்றுப் போன ராகினி, எப்படியாவது காவிரியை பழிவாங்க வேண்டும் என்று துடித்துக் கொண்டு வருகிறார். அதற்கு பக்கபலமாக இருக்கும் விஜய்யிடம் இருந்து முதலில் பிரிக்க வேண்டும் என்று பிளான் பண்ணப் போகிறார். அந்த வகையில் வெண்ணிலாவை பற்றி விஷயங்கள் ராகினிக்கு முதலில் தெரியப் போகிறது.

பிறகு ராகினி, வெண்ணிலாவை வைத்து விஜய் மற்றும் காவிரிக்கு இடையில் விரிசலை உண்டாக்கப் போகிறார். இந்த விரிசலை பெருசு படுத்தி இவர்கள் பிரியும் வகையில் ராகினி ஆட்டம் ஆட போகிறார். ஆனால் என்னதான் வெண்ணிலாவை விஜய் பார்த்தாலும் காவிரியை முழுமையாக காதலிக்க ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் பல சிக்கல்களையும் பிரிவுகளையும் சந்திக்க போகும் இவர்கள் நிரந்தரமாக பிரிய வாய்ப்பு இல்லை.

மகாநதி சீரியலில் நடந்த சம்பவங்கள்

- Advertisement -spot_img

Trending News