கோலிவுட்டின் டாப் நடிகராக இருக்கும் விஜய்க்கு என்று தமிழகத்தில் எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர். இவர் எப்போது அரசியலுக்கு வருவார் என தளபதி ரசிகர்கள் துடித்துடித்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜய் உறுதியாக களம் இறங்குவார் என்ற மிக முக்கிய தகவல் வெளியாகி அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
வரும் 2026 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தளபதியே போட்டியிட வாய்ப்பிருப்பதாக விஜய் மக்கள் இயக்க மாவட்ட மாணவர் அணி செயலாளர் ஆனந்த் கூறியுள்ளது தற்போது கோலிவுட்டை மட்டுமல்ல தமிழக அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜய் மக்கள் இயக்க மாவட்ட மாணவர் அணி செயலாளர் ஆனந்த் அளித்த பேட்டியில், விஜய்யின் பிறந்தநாளுக்கு பின்பு நிச்சயம் பெரிய மாற்றம் வரப்போகிறது.
Also Read: லியோ படத்தில் லோகேஷ் கொடுக்கும் அடுத்த சர்ப்ரைஸ்.. செண்டிமெண்டாக தாக்கிய தளபதி
தொண்டர்கள் விருப்பம் போல் முடிவெடுக்கப்படும் என்றும், தொகுதி வாரியாக அரசியல் நிலவரம் குறித்து கணக்கெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் நிர்வாகிகள் வேறு கட்சி அல்லது இயக்கத்தில் இருக்கக் கூடாது என்றும் ஆனந்த் கூறியிருக்கிறார். அது மட்டுமல்ல இந்த பொதுக் கூட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு 12ம் வகுப்பு தேர்தல் முடிவு வெளியானதால் ஒவ்வொரு தொகுதியிலும் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இவ்வாறு அரசியலில் இறங்குவதற்கான அத்துணை வேலைப்பாடுகளையும் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை வைத்து அதிரடியாக செய்து கொண்டிருக்கும் விஜய், இன்னும் மூன்றே வருடத்தில் அரசியல் களத்தை ஆட்டிப் பார்க்கப் போகிறார். அதற்காக இப்போதிலிருந்து 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க உள்ளோரின் விவரங்களை தளபதி சைலன்டாக கலெக்ட் செய்து வருகிறார்.
Also Read: லியோ படத்தில் லோகேஷ் கொடுக்கும் அடுத்த சர்ப்ரைஸ்.. செண்டிமெண்டாக தாக்கிய தளபதி
ஏற்கனவே ஏப்ரல் 11ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கப் பொதுச் செயலாளர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். மேலும் இந்த மன்றத்தை அரசியல் கட்சியாக வலுப்படுத்த பல திட்டங்களை விஜய் மேற்கொண்டு வருகிறார். மேலும் 2019, 2020, 2022 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றிருக்கின்றனர்.
இவையெல்லாம் விஜய்யின் பிராண்டுக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. விஜய் களத்தில் இறங்காத போதே இவ்வளவு வரவேற்பு கொடுக்கிறார்கள் என்றால், அவர் மட்டும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் களம் இறங்கினால் என்ன நடக்கும் என தற்போது இருக்கும் தமிழக அரசியல் கட்சியினர் கதிகலங்கி கிடக்கின்றனர்.
Also Read: நடிகர்களுக்கு லவ் ஃபெயிலியர் ஆன 5 படங்கள்.. விஜய் கிளைமாக்ஸ் இல் நொறுங்கிப் போன அந்த படம்
மறுபுறம் விஜய் மக்கள் இயக்க மாவட்ட மாணவர் அணி செயலாளர் ஆனந்த் விஜய்யின் பிறந்தநாள் அன்று நடைபெறும் கூட்டத்தில் நிச்சயம் அவர் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இறங்குவார் என்ற நல்ல செய்தி சொல்ல இருக்கிறார் என்ற தகவலை தற்போது வெளியிட்டு தளபதி ரசிகர்களை குத்தாட்டம் போட்டுக் கொண்டாட வைத்துள்ளார்.