கடந்த சில நாட்களாகவே விஜய் பற்றிய செய்தி தான் சோசியல் மீடியாவை பரபரப்பாக்கிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் இவர் நடித்த வாரிசு திரைப்படம் வெளிவந்து கலவையான விமர்சனங்களை பெற்றதை தொடர்ந்து அவருடைய குடும்ப விவகாரமும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதாவது விஜய் தன் மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்து பிரிந்து விட்டதாக ஒரு செய்தி கிளம்பியுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவருடைய மனைவி கலந்து கொள்ளாதது தான். அதற்கு முன்னதாக அட்லியின் வீட்டு வளைகாப்பு நிகழ்விலும் விஜய் தனியாகவே வந்திருந்தார். இவை எல்லாம் சேர்த்து தான் இந்த விவகாரத்தை பூதாகரமாக வெடிக்க வைத்திருக்கிறது.
Also read: அதனால்தான் அவர் சூப்பர் ஸ்டார்.. விஜய்யை குத்திக் காட்டிய எஸ் ஏ சந்திரசேகர்
இந்நிலையில் விஜய்க்கும், நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் பழக்கம் இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே இவர்கள் இருவரும் இரண்டு படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர். அப்போதிலிருந்து ஆரம்பித்த இந்த பழக்கம் இப்போது விஜய் தன் மனைவியை பிரியும் அளவுக்கு வந்திருக்கிறதாம். இது குறித்து பல செய்திகள் வெளி வந்தாலும் இப்போது சோஷியல் மீடியாவில் இது பெரும் புயலை கிளப்பி இருக்கிறது.
அதாவது ரசிகர்கள் பலரும் justice for Sangeetha என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் கீர்த்தி சுரேஷ், விஜய் இருவரும் இணைந்திருக்கும் ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டு வருகின்றனர். அதில் விஜய் கீழே அமர்ந்திருக்க அவர் காலை மிதித்தபடி கீர்த்தி சுரேஷ் சோபாவில் அமர்ந்திருக்கிறார். இது சர்க்கார் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தெரிகிறது.
விஜய்-கீர்த்தி சுரேஷ்

Also read: ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்.. வாரிசு படத்தை வைத்து பிளான் போட்ட சன் டிவி
அப்போதிலிருந்தே அவர்கள் இருவருக்கும் ஒரு தொடர்பு இருக்கிறதாம். இதை தெரிந்து கொண்ட சங்கீதா, விஜய்யை கண்டித்ததாகவும் அவர் மறுத்ததால் தற்போது இந்த விஷயம் பெரிதாகி இருக்கிறது. அதனால் கூடிய விரைவில் இந்த விவகாரம் குறித்த அதிகாரப்பூர்வமான செய்திகள் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க ரசிகர்கள் விஜய்யின் புகழை கெடுக்கவே சில விஷமிகள் இந்த வேலையை பார்த்து வருவதாக கூறி வருகின்றனர்.
தற்போது அரசியலிலும் ஆர்வம் காட்ட தொடங்கியிருக்கும் விஜய்யை ஒட்டுமொத்தமாக முடக்கவே இந்த சதி நடக்கிறது என ரசிகர்கள் கூறுகின்றனர். ஆனால் நெருப்பில்லாமல் புகையாது என்றும் இப்படி பரப்பரப்பை கிளப்பி வரும் இந்த விவகாரத்தில் விஜய் மௌனமாக இருப்பது ஏன் என்ற கேள்வியும் எழுந்து வருகிறது. இதை விளக்குவதற்காக தன் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை அவர் வெளியிடலாமே என்ற ஒரு பேச்சும் கிளம்பியுள்ளது. எது எப்படி இருந்தாலும் விஜய்யின் 23 வருட திருமண வாழ்க்கை தற்போது சோசியல் மீடியாவையே பற்றி எரிய வைத்துள்ளது.