வம்சி இயக்கும் வாரிசு திரைப்படத்தின் ஷூட்டிங் இன்னும் முடியாமல் இழுத்துக் கொண்டே போகிறது. படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாக இருக்கும் நிலையில் இன்னும் ஒரு மாதத்திற்கும் மேலாக ஷூட்டிங் பாக்கி இருக்கிறதாம். இதுதான் தற்போது விஜய்யை அதிக கோபப்படுத்தியுள்ளது.
பொதுவாகவே அவர் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆன பிறகு பாதி படம் முடியும் நிலையில் தனக்கு பிடிக்கவில்லை என்றால் சுத்தமாக இன்ட்ரஸ்ட் காட்ட மாட்டார். அப்படி ஒரு நிலை தான் வாரிசு படத்திற்கு வந்திருக்கிறது. படம் இப்ப முடிந்துவிடும், அப்ப முடிந்து விடும் என்று எதிர்பார்க்கும் நேரத்தில் வம்சி விஜய்யிடம் இன்னும் 18 நாட்கள் கால்ஷூட் வேண்டும் என்று கேட்டு நடிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
Also read : மெத்தனத்தில் இருக்கும் விஜய் அண்ட் கோ.. லீக் விஷயத்தில் இருந்து கடும் அப்செட்டில் தளபதி
இதுதான் விஜய்க்கு உச்சகட்ட கோபத்தை வரவழைத்து இருக்கிறது. ஏனென்றால் அவர் இந்த படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்தின் ஷூட்டிங் வெகுவிரைவில் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. அதற்கான அனைத்து வேலையும் தற்போது தயார் நிலையில் இருக்கிறது.
விஜய் மட்டும் வந்துவிட்டால் ஷூட்டிங்கை ஆரம்பித்து விட வேண்டியது தான் பாக்கி. இப்படி ஒரு சூழ்நிலை இருக்கும் போது வம்சி தன்னுடைய இஷ்டத்திற்கு படப்பிடிப்பை இழுத்துடித்து வருவது விஜய்க்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இருந்தாலும் படத்தை முடித்துக் கொடுத்தே ஆக வேண்டும் என்பதால் அவர் சகித்துக் கொண்டு நடித்து வருகிறாராம்.
Also read : 6 முறை பொங்கலன்று மோதிக்கொண்ட அஜித், விஜய்யின் படங்கள்.. யாருக்கு அதிக வெற்றி தெரியுமா?
வம்சி மட்டும் ஷூட்டிங் முடிந்து விட்டது அவ்வளவுதான் என்று கூறினால் போதும் ஆள விடு சாமி என்று விஜய் ஒரே கும்பிடாக போட்டுவிட்டு லோகேஷ் கனகராஜ் பக்கம் சென்று விடுவார். அந்த அளவுக்கு விஜய் வாரிசு திரைப்பட குழு மீது ரொம்பவும் வருத்தத்தில் இருக்கிறார். இதுவரை விஜய் நடித்த படங்களிலேயே ரொம்பவும் மந்தமாக சென்ற படமும் இதுதானாம்.
அதேபோன்று ரசிகர்களுக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது கொஞ்சம் குறைந்து வருகிறது. ஏனென்றால் விஜய் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து வருவது லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தை தான். அதனாலேயே வாரிசு திரைப்படம் தற்போது சுவாரசியம் குறைந்து காணப்படுகிறது.
Also read : அஜித், விஜய், விக்ரம் என கலக்கிய இயக்குனர்.. ஒரு வெற்றிப் படத்திற்காக 15 வருடம் போராடும் அவலம்