வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

விஜய், கமல், ரஜினி படம்லாம் சும்மா.. LCU-வில் இணையும் பிரபாஸ்.. கைகொடுக்கும் சூர்யா? லோகேஷ் மெகா பிளான்

பான் இந்தியா ஸ்டார் பிரபாஸுடன் லோகேஷ் கனகராஜ் கூட்டணி அமைக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தெலுங்கு நடிகர் பிரபாஸ் பல ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வந்தாலும், ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி படத்தில் வெற்றி அதன் ரூ.1000 கோடி வசூலும் பிரபாஸை பான் இந்தியா ஸ்டாராக மாற்றியது.

தொடர் தோல்வியில் இருந்து மீண்ட பிரபாஸ்

இதையடுத்து, சுஜித் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் 325 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான படம் ஷாகோ. இப்படம் 400 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்பட்டாலும் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து, ராதே ஸ்யாம் படத்தில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் நடித்திருந்தார். 200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியாகி 350 கோடி வசூலித்ததாக கூறப்பட்டாலும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

அதன்பின்னர், ஓம் ராவ்ட் இயக்கத்தில் ராமாயணத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் ஆதிபுரூஸ். இப்படம் 800 கோடி பட்ஜெட்டில் எக்கப்பட்டாலும் இப்படம் படுதோல்வி அடைந்து 450 கோடிதான் வசூலித்தது.

இதையடுத்து கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீல்ஸ் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த படம் சலார். இப்படம் 270 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, 700 கோடி வசூலித்தது. இப்படமும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இப்படத்தை அடுத்து, நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த கல்கி ஏடி 2898 படம் 600 கோடி பட்ஜெட்டில் உருவாகி உலகம் முழுவதும் 1200 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது.

LCU-ல் இணையும் பிரபாஸ் – ரூ.1000 கோடிக்கு பிளான்

இந்த நிலையில் பாகுபலி படத்திற்கு கல்வி படம்தான் பிரபாசூக்கு வெற்றீ படமாக அமைந்ததாக விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இப்படத்தை அடுத்து, கண்ணப்பா, ராஜா சாப், ஃபியூஜி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து, லோகேஷ் ராஜ்குமார் ஹிராணி இயக்கும் படத்திலும், லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்திலும் பிரபாஸ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

கல்கி படத்தின் வெற்றின் மூலம் மகிழ்ச்சி அடைந்துள்ள பிரபாஸ், லோகேஷ் படம் எல்சியு ஆக இருந்தாலும் இதுவரை, விஜய், கமல், ரஜினி படங்களில் இல்லாதவற்றை அப்படத்தில் காட்சியமைக்க உள்ளதாகவும், இப்படம் பிரமாண்ட பொருட்செலவில் ஹாலிவுட் ஸ்டைலில் இருக்கும் என கூறப்படுகிறது.

லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்-ல் வந்த அதே கேரக்டர்களில் பிரபாஸ் படத்திலும் வருமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், இப்படத்திலும் சூர்யா ரோலக்ஸ் கேரக்டர் இருக்கும் எனவும், நிச்சயம் இப்படம் இந்தியாவில் அதிக வசூல் குவிக்கும் படமாக இருக்கும் எனவும், இப்படம் லோகேஷை, அட்லியின் ஜவான் மாதிரி 1000 கோடி வசூல் குவித்து பான் இந்தியா இயக்குனராக மாற்றும் என தகவல் வெளியாகிறது.


Trending News