செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

நவீனை பிளாக்மெயில் பண்ணி கிணற்றில் தள்ளிவிட்ட விஜய் காவேரி.. பழிக்குப் பழி, எண்டரி கொடுக்கும் வெண்ணிலா

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், நவினை வற்புறுத்தி பிளாக் மெயில் பண்ணி பிடிக்காத யமுனாவை கல்யாணம் பண்ண சொல்லி விஜய் மற்றும் காவிரி டார்ச்சர் பண்ணிவிட்டார்கள். நவீன் என்ன பண்ணுவது என்று தெரியாமல் விஜய் வற்புறுத்தலால் யமுனா கழுத்தில் தாலி கட்டி விட்டார். பண்றது எல்லாம் பண்ணிவிட்டு கடைசியில் நவீனிடம் காவிரி ஒரு மன்னிப்பு மட்டும் கேட்டு சமரசம் செய்து விடுகிறார்.

இவ்வளவு நடந்தும் நவீன் வாயை திறந்து எதுவும் பேச முடியாமல் யமுனா வீட்டிற்கு பின்னாடியே போகிறார். இந்த கல்யாணத்தைப் பார்த்து அதிர்ச்சியில் காவேரி குடும்பம் ஒட்டுமொத்தமாக விஜய் மற்றும் காவிரியை திட்டுகிறார்கள். அப்பொழுது விஜய், யமுனா பண்ணிய காரியத்தை சொல்லி நாங்கள் உங்களுக்கு நல்லது தான் பண்ணி இருக்கோம் என்று காவேரி அம்மாவுக்கு புரிய வைக்கிறார்.

வெண்ணிலவை கண்டுபிடித்து கூட்டிட்டு வரும் ராகினி அஜய்

இதனை தொடர்ந்து தன்னுடைய தங்கையின் வாழ்க்கை நினைத்தபடி முடிந்து விட்டது என்ற சந்தோஷத்தில் காவிரி, ஆனந்தகண்ணீர் வடிக்கிறார். அப்பொழுது அங்கே வந்த விஜய்யை பார்த்து நவீன் மண்டபத்திற்கு வரும் வரை நான் உங்க மேல் நம்பிக்கை இல்லாமல் இருந்தேன். எப்படி என் தங்கையின் கல்யாணம் நடக்கும் என்று கவலையில் இருந்த பொழுது நீங்கள் முன்ன நின்று எல்லாத்தையும் நல்லபடியாக நடத்தி வைத்து விட்டீர்கள்.

இப்பொழுது தான் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது உங்களை நம்பி என்ன காரியத்தில் வேணாலும் இறங்கலாம் என்று கொஞ்சம் கூட கூச்சம் நாச்சமே இல்லாமல் விஜய்யை அரவணைத்துக் கொள்கிறார். ஆனால் இவர்கள் இரண்டு பேருடைய சுயநலத்திற்காக பாவம் எந்த தவறுமே பண்ணாத நவீன் பலிகாடாக சிக்கி விட்டார்.

ஆனால் இதையெல்லாம் பார்த்து நவீன் சும்மா இருக்க முடியாது பழிக்கு பழி வாங்க வேண்டும் என்பதற்காக கூடவே இருந்து பிரச்சனை செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில் காவிரி மற்றும் விஜய் ஒப்பந்தத்தின்படி தான் கல்யாணம் பண்ணி இருக்கிறார்கள் என்ற விஷயம் நவீனுக்கு மட்டும்தான் தெரியும். அந்த வகையில் இந்த உண்மையை அனைவருக்கும் தெரியும்படி நவீன் அனைவரிடமும் சொல்லவும் வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் காவேரி மற்றும் விஜய் தன்னுடைய ரூட் தற்போது கிளியர் என்பதற்கு ஏற்ப ஓவராக சந்தோசத்தில் இருக்கிறார்கள். ஆனால் இதில் ஒரு ட்விஸ்ட் வைக்கும் விதமாக ராகினி அஜய், இருவரும் சேர்ந்து வெண்ணிலாவை கண்டுபிடித்து விஜய் கண் முன்னாடி நிறுத்தப் போகிறார்கள். அந்த வகையில் தன்னுடைய சுயநினைவு இழந்த வெண்ணிலா, விஜய் வீட்டிற்கு வந்துவிடுவார்.

வெண்ணிலாவின் நிலைமையை பார்த்த விஜய், கூடவே இருந்து குணமாக வேண்டும் என்று விஜய் அடுத்தடுத்த வேலைகளை பார்க்கப் போகிறார். ஆனால் என்னதான் இருந்தாலும் விஜய் மனதில் தற்போது காவிரி இருப்பதால் வெண்ணிலாவிற்கு இடம் இருக்காது. இதை எதையும் புரிந்து கொள்ளாத காவேரி, விஜய் மனதிற்குள் வெண்ணிலா தான் இருக்கிறார் என்று தவறாக நினைத்து விஜய் விட்டு விலக நினைப்பார். ஆனால் எந்த காரணத்தை கொண்டும் காவிரியை விட்டுக் கொடுக்கக் கூடாது என்று நினைக்கும் விஜய் ரெண்டு பேருக்கும் நடுவில் இருந்து மாட்டிக் கொண்டு முழிக்க போகிறார்.

மகாநதி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News