வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

நவீனை கடுப்பாக்கி ரொமான்ஸில் புகுந்த விஜய் காவேரி.. டென்ஷனான ராகினி, வைக்கப் போகும் செக்

Mahanadhi serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், ராகினியை விட வில்லங்கம் பிடித்த கேரக்டராக யமுனாவின் நடிப்பு பலரையும் எரிச்சல் படுத்திவிட்டது. அதாவது நவீன் இறக்கப்பட்டு யமுனாவிற்கு செய்த உதவியை தனக்கு சாதகமாக பயன்படுத்தி காவிரி மூலம் காரியத்தை சாதித்து விட்டார் யமுனா. இதனால் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொண்ட நவீன் வலுக்கட்டாயமாக தாலி கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.

தனக்கு பிடிக்காத ஒரு வாழ்க்கை எந்த மாதிரி ஒரு நரகத்தை கொடுக்கும் என்று யமுனாவிற்கு காட்ட நவீன் தயாராகிவிட்டார். ஆனால் ஒரு பக்கத்தில் நவீனை பார்க்கும் பொழுது பாவமாக இருந்தாலும், ஒட்டுமொத்த கோபமும் காவேரி மற்றும் விஜய் மீதுதான் திரும்பி இருக்கிறது. ஏனென்றால் அவர்களுடைய சுயநலத்திற்காக நவீனை பலியாடாக சிக்க வைத்து விட்டார்கள்.

கடுப்பில் அஜய்யை டார்ச்சர் செய்யும் ராகினி

காவேரிக்கு தன்னுடைய தங்கச்சி வாழ்க்கை நினைத்தபடி அமைய வேண்டும். விஜய்க்கு காவேரி ஆசைப்பட்ட மாதிரி யமுனா கல்யாணம் நடக்க வேண்டும். அதன் மூலம் நவீன் நம்முடைய வாழ்க்கையில் குறுக்கிட மாட்டார் என்ற நினைப்பில் விஜய், நவீன் குடும்பத்தை பிளாக்மெயில் பண்ணி கல்யாணத்தை செய்து விட்டார்.

இதனால் கடுப்பில் இருக்கும் நவீன், கொஞ்சம் கொஞ்சமாக கோபத்தைக் காட்டும் விதமாக வன்மத்தை சேர்த்துக் கொண்டு வருகிறார். அந்த வகையில் யமுனாவிடம் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி என்னை மறுபடியும் கடுப்பேற்றாதே. உன் கழுத்தில் நான் தாலி கட்டியதால் கடைசி வரை உன்னோடு நான் இருப்பேன்.

ஆனால் ஒரு கணவரிடம் இருக்கும் பாசத்தையும் அன்பையும் நீ என்னிடம் எதிர்பார்க்க முடியாது என்று யமுனாவிற்கு பதிலடி கொடுத்து விட்டார். இது மட்டும் போதாது காவேரி மற்றும் விஜய் செய்த அக்கிரமத்திற்கு தண்டனையாக அவர்களுக்கு ஒரு பாடத்தை கற்பிக்க வேண்டும் என்ற நினைப்பில் காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் காவிரி மற்றும் விஜய் ரொமான்ஸ் பண்ண ஆரம்பித்து விட்டார்கள்.

இதற்கிடையில் இதையெல்லாம் பார்த்த ராகினி, என்னை விட காவிரி தான் முக்கியம் என்று பிடிவாதமாக இருந்த நவீன் தற்போது யமுனாவை தாலி கட்டி விட்டு வந்து விட்டார் என்ற கோபத்தில் டென்ஷனாக இருக்கிறார். இதற்கு ஒட்டுமொத்தமாக விஜய் மற்றும் காவிரியை பழிவாங்கும் விதமாக இவர்களை பிரிக்க வேண்டும் என்ற நினைப்புடன் சுற்றுகிறார்.

அந்த வகையில் அஜய்யிடம், உங்க அண்ணனின் முன்னாள் காதலி வெண்ணிலாவை கண்டுபிடித்து விட்டாயா என்று கேட்கிறார். அதற்கு நானும் தேடிக் கொண்டுதான் இருக்கிறேன் கூடிய சீக்கிரத்தில் வெண்ணிலாவை கண்டுபிடித்து விடுவேன் என்று சொல்கிறார். அதனால் ராகினி, வெண்ணிலாவை கூட்டிட்டு வந்து தான் விஜய் மற்றும் காவிரிக்கு பதிலடி கொடுக்கப் போகிறார்.

மகாநதி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News