வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

முதல் நாள் வசூலில் தெறிக்கவிட்ட விஜய்யின் 5 படங்கள்.. பீஸ்ட் பிளாப்னு சொன்னவங்க இத பாருங்க

தற்போது தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வலம் வருபவர் நடிகர் தளபதி விஜய். சினிமாவில் தொடர்ந்து விஜய்யின் மார்க்கெட் உயர்ந்து கொண்டே போகிறது. மேலும் பெரிய நிறுவனங்களின் தயாரிப்பாளர்களும் விஜய்யின் படத்தை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான 5 படங்களின் முதல் நாள் வசூலை பார்க்கலாம்.

மெர்சல் : அட்லி இயக்கத்தில் விஜய், எஸ் ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் மெர்சல். இப்படம் கடந்த 2017-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியானது. சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இப்படத்தின் முதல் நாள் வசூல் 22.5 கோடி ஆகும்.

சர்கார் : ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2018ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் சர்கார். தேர்தலில் ஒரு ஓட்டின் மதிப்பு என்ன என்பதை பற்றி இப்படம் தெளிவுபடுத்தியது. மேலும் சர்கார் படத்திற்கு பல சர்ச்சைகள் எழுந்தாலும் முதல் நாள் 31.78 கோடி வசூலை ஈட்டியது.

பிகில் : அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிகில். பெண்களின் முன்னேற்றம் மற்றும் ஃபுட்பால் போன்றவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. இப்படம் முதல் நாள் மட்டும் 34.10 கோடி வசூலை பெற்று வந்தது.

மாஸ்டர் : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகன் மற்றும் பலர் நடிப்பில் 2021 இல் வெளியான திரைப்படம் மாஸ்டர். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. மேலும் அப்போது கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கை மட்டுமே அனுமதிக்கப்பட்டது. அப்போதும் மாஸ்டர் படம் 34.80 கோடி வசூல் செய்தது.

பீஸ்ட் : நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் வசூலில் வாரி குவித்துள்ளது. அதாவது பீஸ்ட் படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் 36.71 கோடி ஆகும். விஜய்யின் படங்களிலேயே முதல் நாள் அதிக வசூல் செய்த படம் என்ற அந்தஸ்தையும் பீஸ்ட் படம் பெற்றுள்ளது.

Trending News