Vijay-TVK: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தற்போது 2 கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். அதற்கான வேலையில் நிர்வாகிகளும் தீயாக இறங்கியுள்ளனர். அது மட்டும் இன்றி நேற்று கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்களின் பட்டியலை விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
வீடியோ மூலம் தொடங்கி வைத்த தளபதி

அதில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்திருப்பது வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் கட்சியில் உறுப்பினராக இணைய என்ன செய்ய வேண்டும் என்பதையும் விஜய் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

அது மட்டும் இன்றி கட்சியின் முதல் உறுப்பினர் அட்டையை பெற்றுள்ள அவர் அதன் மூலம் மக்களை ஊக்கப்படுத்தியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது எங்களுடன் இணைந்து மக்கள் பணி செய்ய விரும்பினால் கட்சியின் உறுப்பினர்களாக சேர்ந்து பயணிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த உறுப்பினர் அட்டையை பெறுவது மிகவும் எளிது தான் கட்சியின் உறுதி மொழிகளை படித்துவிட்டு உறுப்பினராக சேர்ந்து கொள்ளலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி கட்சியின் சார்பாக QR கோட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி வாட்ஸ் அப், டெலிகிராம், Web app ஆகியவற்றின் மூலம் மக்கள் உறுப்பினர்களாக சேர்ந்து ஐடி கார்டை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலையில் இருந்தே இப்படிப்பட்ட அறிவிப்புக்காக காத்திருந்த விஜய் ரசிகர்கள் தற்போது உறுப்பினர் அட்டையை பெறுவதில் தீவிரமாகியுள்ளனர்.

மேலும் விஜய் கட்சிக்காக வீடியோ மூலம் பேசியதும் வைரலாகி வருகிறது. அது மட்டும் இன்றி இந்த அறிவிப்பு வெளிவந்த சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கானோர் உறுப்பினர்களாக கட்சியில் இணைந்துள்ளனர்.