வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

சக்சஸ் மீட்டிங் முடிந்த கையோடு தாய்லாந்து கிளம்பிய விஜய்.. புதிய ஹேர் ஸ்டைலில் வெளியான தாறுமாறான புகைப்படம்

Vijay Shooting in Thailanth: லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் அளவில் எதிர்பார்த்த லாபத்தை அடைந்து வருகிறது. அத்துடன் விஜய் ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு லியோ படம் அவர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக இருக்கிறது. இருந்தாலும் அவர்கள் எதிர்பார்த்த ஆடியோ லான்ச் இல்லாததால் அவர்களை திருப்திப்படுத்தும் விதமாக லியோ படத்தின் வெற்றி விழா இரு தினங்களுக்கு முன் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதற்கிடையில் விஜய், வெங்கட் பிரபு கூட்டணியில் தளபதி 68 படத்தின் படப்பிடிப்புக்காக தாய்லாந்தில் இருந்தார். ஆனாலும் ரசிகர்களுக்காக சூட்டிங்கில் இருந்து பாதியிலேயே கிளம்பி லியோ படத்தின் சக்சஸ் மீட்டிங்கு வந்தார். அவர் நினைத்தபடியே வெற்றிகரமாக வெற்றி விழாவை முடித்து விட்டார். அத்துடன் மறுபடியும் படப்பிடிப்பிற்காக இன்று காலை தாய்லாந்து கிளம்பி விட்டார்.

அதற்காக சென்னை விமான நிலையத்தில் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் முழு பாதுகாப்புடன் போயிருக்கிறார். அதில் விஜய்யை பார்க்கும் பொழுது தளபதி 68 படத்திற்கான புது கெட்டப்புடன் ஹேர் ஸ்டைல் வித்தியாசமாக வைத்துக்கொண்டு இருக்கிறார். பொதுவாக இவருக்கும் ஹேர் ஸ்டைலுக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி தான் ஒவ்வொரு படத்திலும் இருக்கிறது.

Also read: என் கண் முன்னாடியே நிக்காத ஓடிடு.. மொத்த பேரையும் கெடுத்துட்ட, வெளுத்து விட்ட லியோ தாஸ்

அப்படித்தான் லியோ படத்திலும் பார்த்திபன் கேரக்டரில் வந்த விஜய் ஹேர் ஸ்டைல் ரொம்பவே வித்தியாசமாகவும், அதே சமயம் இது என்ன இப்படி இருக்கு என்று சொல்லும் அளவிற்கு இருந்தது. ஆனால் இதில் பார்க்கும் பொழுது எதார்த்தமாக புது கெட்டப்புடன் இருப்பது போல் தாறுமாறாக இருக்கிறது.

இதனை தொடர்ந்து வெங்கட் பிரபு படம் ஓரளவுக்கு எப்படி இருக்கும் என்று அனைவராலும் யூகிக்க முடியும். அதற்கு ஏற்ற மாதிரி அவருடைய மொத்த கூட்டத்தையும் தளபதி 68 படத்தில் கூட்டிட்டு வந்திருக்கிறார். அந்த வகையில் இந்த படம் வெங்கட் பிரபு பாணியில் தான் இருக்கப் போகிறது. அதே மாதிரி விஜய்க்கும் ஹியூமர் சென்ஸ் நல்லாவே ஒர்க் அவுட் ஆகும்.

அதனால் தளபதி 68 படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும். லியோ படத்தில் எப்படி பல பிரபலங்கள் வந்து நடித்தார்களோ, அதே போல் இதிலும் பிரசாந்த், பிரபுதேவா, யோகி பாபு, ஜெயராம், பிரேம்ஜி, சினேகா மற்றும் லைலா போன்ற பல பிரபலங்கள் இணைந்து இருக்கின்றார்கள். அத்துடன் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஆக மொத்தத்தில் மொத்த டீமும் சேர்ந்து தாறுமாறாக தளபதி 68 படத்தை வெற்றியாக்கப் போகிறார்கள்.

புதிய ஹேர் ஸ்டைலில் வெளியான புகைப்படம்

vijay-in-thalapathy-68
vijay-in-thalapathy-68

Also read: சூப்பர் ஸ்டாரை குத்தி காட்டிய லோகேஷின் கூட்டாளி.. அனல் பறந்த லியோ சக்ஸஸ் மீட் மேடை

Trending News