வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

லியோ படப்பிடிப்பில் கோபத்துடன் வெளியேறிய விஜய்.. பாவம் படக்குழு ஆசைப்பட்டு கேட்டதால் வந்த விளைவு.!

Actor Vijay: விஜய் தற்போது இயக்குனர் லோகேஷின் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் பின்னணி வேலைகள் நடந்து வருகிறது. இதற்கு கிட்டத்தட்ட மூன்று மாதம் கால அவகாசம் தேவைப்படுகிறது. ஆகையால் அக்டோபர் 19ஆம் தேதி லியோ படத்தின் ரிலீஸ் தேதி முன்பே அறிவிக்கப்பட்டது.

எப்போதுமே ஒரு படத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் கதாநாயக ரோடு புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆசையில் இருப்பார்கள். அதுவும் தளபதி படம் என்றால் சொல்லவா வேண்டும். விஜய் உடன் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டு இருக்கிறார்கள். இதற்காக விஜய்யும் அங்கு சென்று இருக்கிறார்.

Also Read : ஆள் அட்ரஸை தெரியாமல் போன விஜய், அஜித் பட ஹீரோயின்.. சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த லக்கி சாம்

லியோ படத்தைப் பற்றி சொல்லவா வேண்டும், இப்படத்தில் நட்சத்திரங்களை ஏக்கச்சக்க பேர் நடித்திருக்கிறார்கள். ஆகையால் தொழில்நுட்ப வல்லுனர்கள், படக்குழுவினர் என அவர்களே பெரிய கூட்டம் இருக்கிறது. இந்நிலையில் திடீரென அங்கு கூட்டம் அதிகமானதால் விஜய் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து புறப்பட்டு விட்டார்.

இதில் பாதி பேருடனாவது போட்டோ எடுத்து இருந்தால் சிலர் சந்தோஷப்பட்டு இருப்பார்கள். ஆனால் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென சென்றுள்ளது அங்கு உள்ளவர்களை அசிங்கப்படுத்தியது போல் ஆகிவிட்டது. சமீபத்தில் விஜய் மாணவ, மாணவியர்களுக்கு பரிசு வழங்கி இருந்தார். அப்போது எல்லா குழந்தைகளுடனும் போட்டோ எடுத்துக் கொண்டார்.

Also Read : 5 இயக்குனர்களுக்கு வழிகாட்டியாக இருந்த அஜித்.. வந்த பாதையை மறந்து விஜய்க்கு கூஜா தூக்கும் எஸ்ஜே சூர்யா

அதுமட்டுமின்றி கிட்டத்தட்ட பத்து மணி நேரத்திற்கு மேலாக மேடையில் சிரித்த முகத்துடன் விஜய் பரிசு வழங்கியிருந்தார். மாணவர்களுக்கு பரிசு கொடுப்பது நல்ல விஷயம் என்றாலும் இதில் அரசியல் உள்ளது என பலரும் கூறி வந்தார்கள். இப்போது நடந்த இந்த விஷயத்தின் மூலம் இது அப்பட்டமாக தெரிந்து உள்ளது.

அதாவது அத்தனை மீடியாக்கள் முன் அரசியலுக்காக விஜய் 10 மணி நேரத்திற்கு மேலாக நின்ற நிலையில், தன்னுடைய படத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்காக சிறிது நேரம் இருந்த போட்டோ எடுத்து விட்டு சென்றிருக்கலாம். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் விஜய் இவ்வாறு செய்தது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

Also Read : காமெடி பண்றேன்னு கடுப்பேத்திய 6 நடிகர்கள்.. விஜய்யுடன் படம் முழுக்க டிராவல் செஞ்சும் பிரயோஜனம் இல்லாத சதீஷ்

Trending News