புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

தளபதி விஜய் லிப் கிஸ் கொடுத்த 7 நடிகைகள்.. ரொமான்டிக்கான ஹீரோ

இன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார் என்றால் அது தளபதி விஜய் தான். இப்போது விஜய் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படங்களும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை குறித்து கொண்டிருக்கின்றன. விஜய்க்கு 45 வயது ஆனாலும் இன்னமும் இளம் நடிகைகளுடன் ரொமான்ஸ் செய்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு தன்னை கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டுள்ளார். அப்படி விஜய் எந்தெந்த நடிகைகளுக்கு ரொமான்ஸ் காட்சிகளில் லிப் கிஸ் கொடுத்து உள்ளார் என்பதை பார்ப்போம்.

சங்கவி: தளபதி விஜயின் ஆரம்பகால காதலி என பலராலும் வதந்திகள் பரப்பப்பட்ட நடிகை தான் சங்கவி. ஆரம்பத்தில் விஜயுடன் தொடர்ந்து சில படங்களில் ஜோடி சேர்ந்து நடித்தார். இவர்கள் இருவரும் நடிக்கும் படங்களில் ரொமான்ஸ் காட்சிகளில் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். மேலும் விஜய் சங்கவி உடன் லிப் கிஸ் கொடுத்து ரொமான்டிக் காட்சிகளில் நடித்துள்ளார்.

குஷி ஜோதிகா: விஜய்யின் சினிமா கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படங்களில் குஷி படத்திற்கு மிகப் பெரிய பங்கு உண்டு. விஜய்க்கு ஜோடியாக இந்த படத்தில் ஜோதிகா நடித்து இருந்தார். குஷி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஜோதிகா மற்றும் விஜய் இருவரும் லிப் கிஸ் கொடுத்து படத்தை முடித்து வைப்பார்கள். அந்த காட்சி இன்றளவும் சமூகவலைதளத்தில் வைரலாகி கொண்டுதான் இருக்கிறது.

அழகிய தமிழ் மகன் ஸ்ரேயா: விஜய் முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடித்த திரைப்படம் அழகிய தமிழ் மகன். மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ரேயா முதல் முறையாக நடித்திருந்தார். இந்தப் படத்திலும் இருவருக்கும் முத்தக்காட்சி இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

வில்லு நயன்தாரா: விஜய்யின் கேரியரில் படுதோல்வியடைந்த மிகப்பெரிய திரைப்படம் என்று பார்த்தால் அது பிரபுதேவா இயக்கத்தில் வெளியான வில்லு திரைப்படம் தான். இந்த படத்தில் நயன்தாரா படம் முழுக்கவே கிளாமரில் தான் வலம் வந்தார் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. இந்த படத்தில் விஜய் மற்றும் நயன்தாரா இருவருக்கும் உதட்டு முத்தக்காட்சி அமைந்தது.

வேட்டைக்காரன் அனுஷ்கா: ஆரடி ஆப்பிள் ஆக வேட்டைக்காரன் படத்தின் மூலம் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்த அனுஷ்காவுக்கு வேட்டைக்காரன் படத்தில் இடம்பெற்ற சின்ன தாமரை பாடலில் ஒரு உதட்டு முத்தம் கொடுத்து இருப்பார் தளபதி விஜய். அதன் பிறகு தமிழ் சினிமாவில் அனுஷ்கா ஒரு ரவுண்டு வந்தார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நண்பன் இலியானா: ஹிந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த 3 இடியட்ஸ் என்ற படத்தின் தமிழ் ரீமேக்கான நண்பன் படத்தை ஷங்கர் இயக்கினார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக இலியானா நடித்திருந்தார். விஜய்க்கும் இலியானாவுக்கு கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு நீண்ட உதட்டு முத்தக்காட்சி இடம் பெற்றிருக்கும்.

தெறி சமந்தா: அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் தளபதிக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்றிருந்த என் ஜீவன் என்ற பாடலில் இருவருக்கும் ஒரு சின்ன உதட்டு முத்தக் காட்சி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Trending News