வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

என்னது லியோ லோகேஷ் படமே இல்லையா.? த்ரிஷாவால் சல்லி சல்லியான கூட்டணி

Leo-Lokesh: லோகேஷ், விஜய் கூட்டணியில் உருவாகி இருக்கும் லியோ வெளிவருவதற்கு இன்னும் சில வாரங்களே இருக்கிறது. பூஜை போட்டு படத்தை ஆரம்பித்ததில் இருந்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படம் பற்றி தற்போது வெளிவந்துள்ள தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது லியோ லோகேஷ் படமே கிடையாது என்ற ஒரு செய்தி மீடியாவை பரபரப்பாக்கிக் கொண்டிருக்கிறது. இது என்ன புது உருட்டா இருக்கு என்று இந்த விஷயத்தால் விஜய் ரசிகர்கள் கொஞ்சம் ஜெர்க் ஆகி இருக்கின்றனர்.

Also read: லோகேஷை சைலன்டாக காலை வாரிவிட்ட ரஜினி.. 45 வருட கேரியரில் சூப்பர் ஸ்டாருக்கு ஏற்பட்ட கெட்ட பெயர்

ஏனென்றால் லியோ படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது விஜய், த்ரிஷாவுடன் டூயட் சாங், ரொமான்ஸ் காட்சிகள் ஆகியவை வேண்டும் என்று அடம்பிடித்தாராம். பொதுவாக லோகேஷ் படத்தில் இது போன்ற அம்சங்கள் எதுவும் இருக்காது என்பது அனைவருக்கும் தெரியும்.

இதனால் கடுப்பான அவர் விஜய்யிடம் வாக்குவாதம் செய்து படத்திலிருந்து வெளியேறினாராம். கிட்டதட்ட 30 சதவீதம் படப்பிடிப்பு முடிந்த நிலையில் மீதி 70 சதவீதம் கதையை குலு குலு பட இயக்குனர் ரத்னகுமார் இயக்கியுள்ளதாக ஒரு தகவல் காட்டுத்தீ போல் பரவிக் கொண்டிருக்கிறது.

Also read: லியோ படத்தில் கைவச்ச சென்சார் போர்டு.. தலைவலியில் லோகேஷ், விஜய் கூட்டணி

ஆனாலும் வியாபார நோக்கத்தில் பட குழுவினர் லோகேஷ் பெயரை இப்போது பயன்படுத்தி வருவதாகவும் சிலர் செய்தியை பரப்பி வருகின்றனர். ஆனால் இது உண்மையாக இருக்க வாய்ப்பே இல்லை. அந்த வகையில் நிச்சயம் இது லியோ படத்திற்கு எதிரான விஷயமாகத் தான் பார்க்கப்படுகிறது.

தற்போது ப்ரீ பிசினஸில் லாபம் பார்த்து வரும் லியோ ஆயிரம் கோடி வசூலிக்கும் என்ற கருத்து கணிப்புகளும் எழுந்து வருகிறது. இந்த சூழலில் இப்படிப்பட்ட பொய்யான செய்திகள் சில விஷமிகளால் பரப்பப்பட்டு வருகிறது. ஆனாலும் த்ரிஷாவால் விஜய், லோகேஷ் நட்பு கூட்டணி உடைந்தது என்ற செய்தி உண்மையா, பொய்யா என்ற சந்தேகத்தையும் கிளப்பியுள்ளது.

Also read: நான் சொன்ன கதையை இப்படியா பண்ணுவீங்க.. ரஜினி மீது பயங்கர அப்செட்டில் லோகேஷ்

Trending News