விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படம் விரைவில் வெளியாக உள்ளதைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார் விஜய்.
இந்த படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோவை சமீபத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.
தற்போது அதனைத் தொடர்ந்து நெல்சன் டாக்டர் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துவிட்டாராம். அடுத்ததாக தளபதி 65 படத்திற்கான கதை விவாதங்களில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில் தளபதி விஜய் டாக்டர் படம் பார்த்துவிட்டு நெல்சனை மிகவும் பாராட்டியதாக செய்தி வெளியாகி உள்ளது.
இன்னும் படமே வெளியாகவில்லை அதற்குள் எப்படி பார்த்திருப்பார் என்று யோசிக்க வேண்டாம். முழுவதுமாக எடிட் செய்யப்பட்ட டாக்டர் படத்தின் நகல் காப்பியை(rough copy) தான் தளபதி விஜய் பார்த்துள்ளாராம்.
அந்த படத்தை பார்த்த உடனேயே விஜய்க்கு ரொம்ப பிடித்துவிட்டதாம். மேலும் படம் சூப்பர் எனவும் நெல்சனுக்கு தெம்பு கொடுத்துள்ளார். உடனே குஷி மூடில் நெல்சன் சிவகார்த்திகேயனுக்கு போன் அடிக்க அனைவருமே ஹேப்பி தான்.
வரும் பொங்கலுக்கு சிவகார்த்திகேயனின் டாக்டர் பட டீசர் வெளி வர அதிக வாய்ப்பு இருக்கிறது என தெரிகிறது. அதனைத் தொடர்ந்து டாக்டர் படம் கோடை விடுமுறையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.