Vijay: பிள்ளை பெறுவதற்கு முன் பெயர் வைப்பது என்று சொல்வார்கள். அதைத்தான் தமிழக வெற்றி கழகம் கட்சியின் நிர்வாகிகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் ஏற்கனவே வளர்ந்து ஆலமரம் போல் வேரூன்றி நிற்கும் இரண்டு பெரிய கட்சிகளை எதிர்க்க வேண்டும்.
முதல் தேர்தலிலேயே தன்னுடைய பலத்தை காட்ட வேண்டும். முதலமைச்சர் இல்லை என்றாலும், எதிர்க்கட்சியாவது இருந்துவிட வேண்டும் என்பதுதான் விஜயின் பெரிய கனவாக இருக்கிறது.
ஆனால் அவருடைய நிர்வாகிகளுக்கு கட்சியில் பதவி யாருக்கு என்று அடித்துக் கொள்ளவே நேரம் சரியாக இருக்கிறது போல.
இதனால் ஒட்டுமொத்த நிர்வாகிகளையும் நேற்று பனையூருக்கு வர சொல்லி பெரிய அளவில் மீட்டிங் நடந்தது.
குட்டு வைத்த விஜய்
விஜய் தன்னுடைய அதிருப்தியை காட்டும் வகையில் மீட்டிங்கில் கலந்து கொள்ளாமல் படப்பிடிப்புக்கு சென்று விட்டார்.
விஜய் இல்லை என்றாலும் மீட்டிங்கில் தரமான சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது.
அதாவது கட்சியின் மாவட்ட செயலாளர், இணைச் செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர் என்ற 5 பதவிக்கு போட்டியிட புதிய விதிகள் விதிக்கப்பட்டிருக்கிறது.
அதில் பெரிய அளவில் கவனம் வைத்திருப்பது எந்த பதவியாக இருந்தாலும் நான்கு ஆண்டுகளுக்கு தான் செல்லும்.
அதன் பின்னர் மீண்டும் இதே போன்று தேர்வு குழு தேர்ந்தெடுத்து மாற்றிக் கொண்டே இருக்கும் என்பதுதான்.
தேர்தலில் எவ்வாறு தங்களுடைய களப்பணியில் செய்து வெற்றி அடைய வைக்கிறார்கள் என்பதை பொறுத்து இது மாறும் என கணிக்கப்படுகிறது.
நிரந்தரம் இல்லாத இந்த இடத்திற்கு இனி அடித்துக் கொள்ள வேண்டாம் என தங்களுடைய திறமைகளை காட்ட இனி நிர்வாகிகள் செயல்படுவார்கள்.