Vijay: பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மட்டம் வீக் என்று ஒரு காமெடியில் வடிவேலு சொல்லி இருப்பார். அப்படி ஒரு சம்பவம் தான் தமிழக அரசியல் களத்தில் நடந்திருக்கிறது.
நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் தமிழகத்தின் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.
ஆட்டம் காண வைக்கும் தளபதி
அவர் ஒரு நடிகர், சினிமா டயலாக் மாதிரி பேசிக் கொண்டிருக்கிறார் என அவர் மீது சினிமா சாயம் பூசப்படுகிறது.
அவர் பேச்சு மற்றும் நடவடிக்கை எதுவுமே எங்களை பாதிக்கவில்லை என ஆளுங்கட்சியினர் எல்லா மீடியாக்களிலும் ஜம்பமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம் தமிழக வெற்றி கழகத்தின் பல நடவடிக்கைகளுக்கு தமிழக அரசால் முட்டுக்கட்டை போடப்பட்டுக் கொண்டிருக்கிறது.
விஜய் மக்களை நேரில் சந்திக்க ஆரம்பித்தால் விஜயகாந்த் மாதிரி பெரிய செல்வாக்கு அவருக்கு வந்துவிடும் என்ற பயத்தால் 70 ஆண்டு கால கட்சி ஆட்டம் கண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.