ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

அதிரடியாக கட்சியை அறிவிக்கும் விஜய்.. விசுவாசிகளுக்கு வைத்த முக்கியமான வேண்டுகோள்

Vijay makkal iyakkam soon to emerge as a political Party aimed as loksabha election: சும்மா இருந்த சிங்கத்தை சொறிஞ்சு விட்ட மாதிரி சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டு புகழின் உச்சிக்கு சென்று கொண்டிருந்த விஜய்யை சில அரசியல் தலைவர்கள் சீண்டியதன் பேரில் அவரது பார்வை படிப்படியாக அரசியலுக்கு திரும்பியது.

அரசியலில் தனது வருகை சாதாரணமாக இருக்கக் கூடாது என்று செம்மையாக பல திட்டங்களை வகுத்து இப்போது இருக்கும் அரசியல் கட்சிகளுக்கு போட்டியாக பக்காவாக ஸ்கெட்ச் போட்டு வருகிறார் விஜய். கடந்த சட்டசபை தேர்தலில் ஒவ்வொரு நடிகர்களாக வரிசையில் நின்று வாக்களிக்க, இவரோ யாரும் எதிர்பாராத அளவு சைக்கிளில் வந்து  வாக்களித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்குவது, தொகுதி வாரியாக நூலகம் அமைப்பது, மழை திட்ட உதவி, வெள்ள நிவாரண பணி என அரசியலுக்கான அச்சாரத்தை பலமாக போட்டார் விஜய்.  இந்நிலையில் சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியல்வாதியாக மாறிவிடுவாரோ என்று எண்ணிக்  கொண்டிருந்தனர் ரசிகர்கள்.

Also read: விஜய்யை விடாமல் துரத்தி பிடித்த ரஜினி பட இயக்குனர்.. பல நூறு கோடி முதலீட்டிற்கு சன் பிக்சர்ஸ் உடன் போட்டி போடும் நிறுவனம்

கடந்த ஆண்டு இதை உறுதி செய்யாத வகையில் வாரிசு,லியோ என வெற்றி படங்களை கொடுத்து விட்டு அடுத்ததாக வெங்கட் பிரபுவுடன் G.O.A.T படத்திலும் இணைந்தார் தளபதி.  என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார் சினிமாவா? அரசியலா? என்று ரசிகர்களை குழப்பத்திலேயே வைத்திருக்கிறார் விஜய்.

G.O.A.T படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் விஜய் 69 காண இயக்குனர் தேர்வு, தயாரிப்பு நிறுவனம் என ஒவ்வொன்றையும் கவனமாக தேர்வு செய்து வருபவர், தனது அரசியலையும் விட்டுவிடாமல் கமுக்கமாக  சென்னையை அடுத்த பனையூரில் நிர்வாகிகளுடன் ரகசிய ஆலோசனையிலும் ஈடுபட்டு உள்ளார்.

தென் மாவட்டங்களை சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து வருகின்ற லோக்சபா தேர்தலில் போட்டியிடுமாறு தனது அரசியல் கட்சியை பதிவு  செய்யலாமா அல்லது  கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கலாமா போன்ற பல்வேறு ஆலோசனைகளை நடத்தியுள்ளார் தளபதி விஜய். விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறப்போவது உறுதியாகியுள்ளது. தேர்தலை சந்திக்கும் பட்சத்தில் “நல்லவர்களுக்கு ஓட்டளியுங்கள்” என்று மக்களிடம் கூறுமாறு நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் வைத்துள்ளாராம்.  “வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகிறான்! தளபதி தளபதி நீயே எங்கள் தளபதி!” என ரசிகர்கள் குதூகலிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

Also read: ரஜினிக்கு போட்டியா உச்சம் தொடும் விஜய்யின் சம்பளம்.. அரசியல் என்ட்ரிக்கு முன் கொட்டிக் கொடுக்கும் தயாரிப்பாளர்

Trending News