நடிகர் விஜய் தனது நற்பணி மன்றம் ரசிகர் மன்றம் ஆகியவற்றை மாற்றி மக்கள் இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கினார். இதில் நடிகர் விஜய்யின் தந்தை சந்திரசேகர் அவர்களும் நிர்வாக உறுப்பினராக இருந்தார்.
தற்போது 9 மாவட்டங்களில் 2 கட்டமாக நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் போட்டியிட்டுள்ளனர்.
தற்போது வாக்கு எண்ணிக்கை முடிவில் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 77 பேர் உறுப்பினர் பதவிகளை கைப்பற்றியுள்ளனர். இந்த செய்தியை விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த பிரபு என்பவர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் அரசியலில் சாதிக்க முடியாததை தளபதி ரசிகர்கள் சாதித்துள்ளனர். இந்த சாதனையை தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நடிகர் விஜய் தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர். நடிகர் விஜய் அரசியலுக்கு வரும் பட்சத்தில் அவருடைய கட்சி மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுக்கும்.
இந்த வெற்றி அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த விஜய் ரசிகர்கள் இந்த வெற்றியை சமூக வலைத்தளங்களில் தெறிக்க விடுகின்றனர்.