செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

ரசிகர்களை உசுப்பேற்றி வேடிக்கை பார்ப்பாரா விஜய்? பவுன்சர் பாய் சொன்ன ஷாக்கிங் தகவல்

தளபதி விஜய் தன்னுடைய ரசிகர்கள் மீது எவ்வளவு அன்பும் மரியாதையும் வைத்திருக்கிறார் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். அப்படி இருக்கையில் விஜய் தன்னுடைய ரசிகர்களை உசுப்பேற்றி விட்டு வேடிக்கை பார்ப்பார் என்பது போன்ற தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான். மற்ற நடிகர்களை காட்டிலும் விஜய் படங்களுக்கு நல்ல வியாபாரம் உள்ளது. தமிழில் மட்டுமில்லாமல் தென்னிந்திய மொழிகளில் உள்ள அனைத்து ஏரியாக்களிலும் தமிழ் படங்களைப் பொறுத்தவரை தற்போது விஜய் படங்களுக்கு தான் அதிக மார்க்கெட்.

அதைப்போல் விஜய்யின் ரசிகர் பட்டாளங்களை பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. அதுவும் குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளாவில் அவருக்கு வெறித்தனமான ரசிகர்கள் இருக்கிறார்கள். விஜயும் தன்னுடைய ரசிகர்களுக்கு ஒன்று என்றால் எந்த லெவலுக்கு வேண்டுமானாலும் இறங்குவார் என்பதை ஒவ்வொரு முறையும் நிரூபித்து வருகிறார்.

இப்படி இருக்கையில் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த பவுன்சர் ஒருவர், ஒரு மிகப்பெரிய நடிகர் வேண்டுமென்றே தன்னுடைய ரசிகர்களிடம் சென்று கை காட்டிவிட்டு, அவர்களை உசுப்பேற்றி வேலி எல்லாம் உடைத்துக் கொண்டு உள்ளே வர வைத்து விட்டு, ஒன்றும் தெரியாதது போல் நேராக கேரவன் சென்று அமர்ந்து கொண்டு தன்னிடம் யாரையும் உள்ளே விடாதே எனக் கூறியதாக சொல்லியுள்ளார். அதுமட்டுமில்லாமல் அந்த பவுன்சரை அழைத்து, பார்த்தியா என்னுடைய கெத்த என்று சொன்னதாகவும் தெரிவித்துள்ளார்.

விஜய்யின் மாஸ்டர் பட சூட்டிங்கின்போது கம்பி வேலியை பொளந்து கொண்டு ரசிகர்கள் உள்ளே சென்ற வீடியோ வெளியாகியது. தற்போது அதனுடன் இந்த செய்தியை ஒப்பிட்டு பலரும் பேசி வரும் நிலையில், அந்த பவுன்சர் நானே ஒரு விஜய் ரசிகர் எனவும் நான் எப்படி விஜயை பற்றி தப்பாக பேசுவேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர், எந்த நடிகர் என்பதை மட்டும் சொல்லாமல் விட்டதால் தற்போது விஜய் தான் என புரிந்து கொண்டு பலரும் சமூக வலைதளங்களில் விஜய் பற்றிய நெகட்டிவ் கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.

Trending News