திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

குறுகுறுவென பார்க்கும் பூனை, வீடியோ கேம் விளையாடும் விஜய்.. அசத்தலான மாஸ்டர் புதிய புகைப்படம்

விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வருகிற பொங்கலுக்கு வெளிவர உள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தினை திரையில் காண கோடான கோடி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

அதுமட்டுமில்லாமல் திரையரங்குகளில் 100 % இருக்கைகளுடன் படத்தை திரையிடலாம் என தமிழக அரசு அறிவித்ததையடுத்து படக்குழு படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாஸ்டர் படத்தை பற்றி பல பேட்டிகளில் படத்தில் நடித்த நடிகர்களும், படத்தின் இயக்குனருமான லோகேஷ் கனகராஜ் அவ்வப்போது ஏதாவது தகவலை வெளியிட்டு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகின்றனர்.

இப்படம் பொங்கலுக்கு வெளியாவதில் ஒரு சில சிக்கல்கள் வந்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் படக்குழுவினர் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் மாஸ்டர் படத்தின் புதிய ப்ரோமோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளனர்.

master cat
master cat

அதில் நடிகர் விஜய் கேம் விளையாடுவது போலவும் அருகில் பூனைக்குட்டி அமர்ந்து உள்ளது போலவும் புகைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. மாஸ்டர் படத்தில் இடம்பெறும் இந்த பூனைக்குட்டிக்கும் கதைக்கும் நெருங்கிய சம்பந்தம் இருக்கிறது என்பதை போல பூனையை குறிப்பிட்டு காட்டி வருகின்றனர் படக்குழுவினர்.

 

master
master

மற்றொரு புகைப்படத்தில் கல்லூரி மாணவர்களுடன் விஜய் கையில் ஜூஸ் வைத்து அமர்ந்துள்ளார். தற்போது இரண்டு புகைப்படங்களும் சமூக வலைகளில் வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து மேலும் சில புதிய புகைப்படங்களையும் இணையதளங்களில் மாஸ்டர் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

- Advertisement -

Trending News