வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தளபதி தல தோனி நேரில் சந்திப்பு.. ரசிகர்கள் கொண்டாட்டம்!

தமிழ் சினிமா ரசிகர்களால் தளபதி என அன்பாக அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். அதேபோல் கிரிக்கெட் ரசிகர்களால் தல என செல்லமாக அழைக்கப்படுபவர் தோனி. இவர்கள் இருவரும் நேருக்குநேர் சந்தித்த சம்பவம் ஒன்று இன்று நடந்துள்ளது.

சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் பீஸ்ட் படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. நடிகர் விஜய் இதில் கலந்துகொண்டு நடித்து வருகிறார். இதே ஸ்டூடியோவில் தோனி நடிக்கும் விளம்பர படமொன்றும் படமாக்கப்பட்டு வருகிறது. விஜய் படத்தின் ஷூட்டிங் நடப்பதை அறிந்துகொண்ட தல தோனி நேரில் சென்று விஜய்யை சந்தித்து பேசியுள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இதேபோல் டுவிட்டரில் #தலதளபதி என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இதைப்பார்த்த தல அஜித் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா .. அவர்கள் தங்கள் பங்கிற்கு தல என்றால் அஜித் மட்டும்தான் என்பதை உணர்த்துவதுபோல் #ஒரேதல அஜித் என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

vijay dhoni
vijay dhoni

இதையடுத்து விஜய் ரசிகர்களும் #தளபதிவிஜய் என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த புகைப்படத்தை பதிவிட்டு Master and the blaster! என குறிப்பிட்டுள்ளது.

அடுத்த மாதம் ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில் சி.எஸ்.கே அணியினர் தற்போது சென்னை வந்துள்ளனர்.

Trending News