சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

விஜய்யை சந்திக்க சென்ற கார்த்திக்.. அடையாளம் தெரியாமல் விழி பிதுங்கிய தளபதி!

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் முதல்கட்டமாக விஜய் மற்றும் பூஜா ஹெக்டே பங்கேற்கும் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அதே படப்பிடிப்பு தளத்தில் இரு தினங்களுக்கு முன்பு நடிகர் கார்த்திக்கின் சர்தார் படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தில் தந்தை மகன் என இருவேறு கதாப்பாத்திரத்தில் நடிகர் கார்த்தி நடித்து வருகிறார்.

இதில் தந்தை கேரக்டருக்காக அதிகமான தாடியுடன் வித்தியாசமான கெட்டப்பில் காணப்படும் கார்த்தி, ஒரே படப்பிடிப்பு தளத்தில் உள்ள விஜய்யை சென்று சந்தித்துள்ளார்.

ஆனால், அதிகமான தாடி மீசையுடன் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் கார்த்தி இருந்ததால், அவரை அடையாளம் காணமுடியாத விஜய் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.

இதையடுத்து கார்த்தி தன்னை அறிமுகம் செய்து கொண்டு பேசிய பின்னர் அதிர்ச்சியடைந்த விஜய் அவரை கட்டியணைத்து பாராட்டியுள்ளார். அடையாளம் காண முடியாத அளவிற்கு கெட்டப்பை மாற்றி உள்ள கார்த்திக்கு விஜய் பாராட்டு தெரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

sardar-cinemapettai
sardar-cinemapettai

Trending News