நடிகர் விஜய் நடிப்பில் தளபதி 66 திரைப்படத்திற்கான பூஜை சென்னையில் நடைபெற்றது. தெலுங்கில் பிரபலமான இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கவுள்ள இத்திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளார். நேற்று இத்திரைப்படத்தின் பூஜை போட்ட புகைப்படம் வெளியாகி வைரல் ஆன நிலையில் நடிகர் விஜய்யும், முதல்வர் மு.க. ஸ்டாலினும் திருமண நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்து கொண்டு கைக்குலுக்கிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.
இதனிடையே இதுகுறித்து நடிகர் விஜய்யின் கடுமையான உத்தரவின் பேரில், விஜய் மக்கள் இயக்கத்தினர் ஒரு புதிய கண்டிஷனை அதிரடியாக போட்டு பத்திரிக்கையாக வெளியிட்டுள்ளனர். வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமாரின் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. இதனிடையே திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பிரபல ஏஜிஎஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் கல்பாத்தி அகோரத்தின் மகள் ஐஸ்வர்யாவின் திருமண நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திரைப்பட கலைஞர்கள், அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள் நடிகைகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனிடையே நடிகர் விஜய்யும், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மேடையில் ஏறி மணமக்களை வாழ்த்தினர். அப்போது இருவரும் கைகுலுக்கி பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர். மேலும் அங்கு வந்த உதயநிதி ஸ்டாலினும் நடிகர் விஜய்யை கட்டியணைத்து தன்னுடைய அன்பை பகிர்ந்துள்ளார்.
இந்த நிகழ்வை பார்த்த அந்த திருமண அரங்கமே கைகளை தட்டி உற்சாகமாக வரவேற்றது. இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய்யின் உத்தரவின் பேரில் விஜய் மக்கள் இயக்கத்தினர் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா,மாட்டாரா என எதிர்பார்த்த நிலையில் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பாக வேட்பாளர்கள் தேர்தலில் நின்று பல இடங்களில் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில் தற்போது அரசு பதவிகளில் உள்ளோரை எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில் பேசவோ, எழுதவோ, சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் மற்றும் மீம்ஸ்கள் உள்ளிட்டவற்றை இயக்கத்தினர் எக்காரணத்தைக் கொண்டும் வெளியிடக்கூடாது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை மீறுபவர்களுக்கு கட்சியை விட்டு அதிரடியாக நீக்கப்படுவார்கள் என்றும், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் சட்டப்படி தகுந்த நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.