சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

நவீனுக்கு செஞ்ச பாவம், வெண்ணிலாவை பார்த்து உருகி உருகி அழும் விஜய்.. காவிரி மீது பழியை போடும் ராகினி

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், விஜய்யின் பிறந்தநாளுக்கு விலைமதிக்க முடியாத ஒரு பொருளையும் கடையில் கிடைக்காத அளவிற்கு ஒரு கிப்டையும் கொடுக்க வேண்டும் என்று விஜய், காவேரியிடம் கேட்டுக் கொண்டார். அதன்படி காவிரி எடுத்த முடிவு தான் வெண்ணிலாவை கூட்டிட்டு விஜய் கண் முன்னாடி நிறுத்த வேண்டும் என்று.

அதற்குள் விஜய், எனக்கும் காவிரிக்கும் மனதார ஒத்து போய்விட்டது. அதனால் இனி எங்களுக்குள் போட்ட கல்யாண ஒப்பந்த பத்திரம் தேவையில்லை. அதை காவிரி கண்முன்னே கிழித்து தூர போட போகிறேன் என்று தாத்தாவிடம் சொல்லி சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் காவிரி, வெண்ணிலாவை கூட்டிட்டு விஜய் வீட்டிற்கு வந்து விடுகிறார்.

அதற்கு முன் கங்கா, வெண்ணிலாவை கூட்டிட்டு போக வேண்டாம் என்று காவேரியை தடுத்து பார்க்கிறார். ஆனால் காவேரி இந்த ஒரு விஷயத்தில் நான் பிடிவாதமாகத் தான் இருப்பேன். நீ சொன்னால் கேட்க மாட்டேன் என் விஷயத்தில் தலையிடாதே என்று சொல்லி வெண்ணிலாவை வீட்டிற்குள் கூட்டிட்டு போய்விடுகிறார். வெண்ணிலாவை பார்த்ததும் விஜய் கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்து விட்டார்.

இவ்வளவு நாள் என்னை விட்டு எங்கே போனாய் வெண்ணிலா, நீ இல்லாமல் நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இருந்தேன் என்று உனக்கு தெரியுமா? ஏன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறாய் என்று வெண்ணிலாவிடம் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். ஆனால் வெண்ணிலா எதுவும் பதில் சொல்லாத நிலையில் இருப்பதால் விஜய், இவளை நீ எங்கே பார்த்தாய்.

ஏன் எதுவும் பேசாமல் வெண்ணிலா இப்படி அமைதியாக இருக்கிறார் என்ன ஆச்சு என்று காவிரியிடம் கேள்வி கேட்கிறார். காவிரி சொல்ல வரதுக்கு முன் ராகினி அங்கிருந்து வந்து நான் சொல்லுகிறேன் என்று எல்லா பழியையும் காவிரி மீது போடும் விதமாக ராகினி கோர்த்து விட்டார். அதாவது நானும் அஜ்ஜையும் கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு ஆசிரமத்திற்கு போயிருந்தோம்.

அங்கே தான் வெண்ணிலா இருந்தால், அப்பொழுது தான் அஜய் சொல்லி எனக்கு எல்லாம் உண்மையும் தெரியும். ஆனால் அதை நாங்கள் அப்பவே உங்களிடம் சொல்லி இருந்தால் இதுவும் ஏதோ எங்களுடைய ப்ளான் என்று சொல்லி எங்களை தப்பா நினைத்து இருப்பீங்க என்று நினைத்து உங்களிடம் சொல்லாமல் விட்டு விட்டோம் என அஜய் சொல்கிறார்.

ஆனால் அதற்குள் ராகினி, அதனால் தான் காவிரியிடம் சொல்லி வெண்ணிலா இருக்கும் இடத்தையும் காட்டிட்டு உங்களிடம் சொல்ல சொல்லி இருந்தோம். ஆனால் காவேரி உங்களிடம் சொல்லாமல் இப்பொழுது நேரடியாக வீட்டிற்கு கூட்டிட்டு வந்திருக்கிறார் என்று காவேரி மீது தப்பு இருப்பது போல் ராகினி, விஜய் மனசை குழப்புகிறார்.

பிறகு வெண்ணிலவுக்கு என்ன நடந்துச்சு என்று அஜய்யிடம் விஜய் கேட்கிறார். அதற்கு அஜய் சொல்வது என்னவென்றால் வெண்ணிலா கண்ணு முன்னாடியே அவங்க அப்பா அம்மா போன காரு விபத்து ஆகிவிட்டது. அதை பார்த்து அதிர்ச்சியில் வெண்ணிலாவுக்கு சுயநினைவு இல்லாமல் போய்விட்டது. அந்த விபத்தில் வெண்ணிலாவின் அம்மா அப்பாவும் இறந்து விட்டார்கள்.

அதனால் யாருமே ஞாபகம் இல்லாத அளவிற்கு ஆசிரமத்தில் இவ்வளவு நாள் இருந்திருக்கிறார் என்று சொல்கிறார். உடனே விஜய், வெண்ணிலாவை பார்த்து என்னை ஞாபகம் இருக்கிறதா நான் யார் என்று தெரிகிறதா என்று அழுது கொண்டே கேட்கிறார். இதையெல்லாம் பார்த்த காவிரி எதுவும் பேச முடியாமல் வாயடைத்து போய் இருக்கிறார்.

என்னதான் வெண்ணிலாவை விஜய் பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டு பொங்கினாலும், இனி விஜய் மனதில் வெண்ணிலா இல்லை என்பதற்கு ஏற்ப காவிரி புகுந்து விட்டார். அந்த வகையில் விஜய் மற்றும் காவிரிக்கு விரிசல் வராது. இருந்தாலும் வெண்ணிலாவையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு மறக்க முடியாமல் தவிர்க்க போகிறார். இதெல்லாம் நவீனுக்கு செஞ்ச கர்மா தான் விஜய் மற்றும் காவிரியை திருப்பி அடிக்கிறது.

Trending News