வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

மனக்கசப்பை மறந்து அப்பாவை பார்க்க போன விஜய்.. சர்ச்சைக்கு வைத்த முற்றுப்புள்ளி

Actor Vijay: விஜய் தற்போது லியோ படத்தை முடித்த கையோடு தளபதி 68 படத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். இதற்காக ஆரம்ப கட்ட பணிகளுக்காக அவர் அமெரிக்கா சென்று விட்டு நேற்று தான் சென்னை திரும்பினார். அதிலிருந்தே அவர் குறித்த ஒரு சர்ச்சையான செய்தி மீடியாவில் வைரலாகி வந்தது.

அதாவது சமீபத்தில் தான் விஜய்யின் அப்பா எஸ் ஏ சந்திரசேகருக்கு உடல் நல பிரச்சனை காரணமாக ஆப்ரேஷன் செய்யப்பட்டிருந்தது. அதிலிருந்து அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் ஆறுதல் தெரிவித்தனர்.

Also read: லியோ, தலைவர் 171-க்கு நடுவில் சம்பவம் செய்ய போகும் லோகேஷ்.. கூட்டணி போடும் அனிருத்

இந்த சூழலில் விஜய் தன் அப்பாவை சந்திக்கவில்லையே என்று பலரும் கடும் விமர்சனம் செய்து வந்தனர். ஏனென்றால் இவர்கள் இருவருக்குள்ளும் கடந்த சில வருடங்களாகவே சிறு கருத்து வேறுபாடு இருந்து வந்தது. அது மீடியாக்களிலும் பரபரப்பாக பேசப்பட்டது.

அதனாலேயே விஜய் தன் அப்பாவை நேரில் பார்க்க செல்வாரா என்ற ஒரு எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் எங்களுக்குள் எந்த பிரச்சனையும் கிடையாது. என்ன இருந்தாலும் அவர் என்னுடைய அப்பா என்று சொல்லும் வகையில் விஜய் இப்போது தன் குடும்பத்தை சந்தித்திருக்கிறார்.

Also read: விஜய் பயந்த மாதிரியே எல்லாம் நடந்தது.. வெந்த புண்ணில் வேல்-ஐ பாய்ச்சும் வெங்கட் பிரபு

அந்த வகையில் விஜய் தன் அம்மா அப்பாவை சந்தித்த புகைப்படம் இப்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் எஸ் ஏ சந்திரசேகர் சற்று சோர்வோடு அமர்ந்திருக்க அவருக்கு அருகில் விஜய் கைகளை கட்டிய படி சிறு புன்னகையோடு இருக்கிறார்.

அவர்கள் இருவரையும் ஒன்றாக பார்த்த மகிழ்ச்சி ஷோபா சந்திரசேகர் முகத்தில் நன்றாகவே தெரிகிறது. தற்போது ரசிகர்கள் இந்த போட்டோவை அதிகம் ஷேர் செய்து பேசிய வாயெல்லாம் இப்போ ஆஃப் ஆயிடுச்சு என்று கமெண்ட் கொடுத்து வருகின்றனர். இதன் மூலம் விஜய் நீண்ட நாள் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அப்பாவை பார்க்க போன விஜய்

vijay-SA chandrasekar
vijay-SA chandrasekar

Trending News