தமிழ் சினிமாவில் பல்வேறு கதைகளில் நாயகர்கள் மாற்றப்படுவது வழக்கமான ஒன்று. கதைக்கு செட் ஆகாத நாயகன் இயக்குனருக்கு செட் ஆகாத நாயகன் என மாறுதலுக்கு பஞ்சமே இல்லை. இப்படியாக தெளிவானகதைகளை தேர்வு செய்து நடிப்பதில் கில்லாடிகள் வளர்ந்த தமிழ் நடிகர்கள் அப்படியே தளபதி விஜய் சில கதைகளை வேண்டாம் என தவிர்த்துள்ளார். அப்படி தளபதி தவிர்த்து தாராளமான வெற்றிகளை பதிவு செய்த சில படங்களை பற்றி பார்ப்போம்.
சண்டக்கோழி: இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் மெகாஹிட் வெற்றியை பதிவு செய்தது இந்த படம். இந்த படத்திற்காக முதலில் சூர்யாவிடமும் பிறகு தளபதி விஜயிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார் இயக்குனர் லிங்குசாமி இருவரும் மறுப்பு தெரிவிக்கவே விஷாலை ஒப்பந்தம் செய்தார் இயக்குனர் லிங்கு சாமி.

ஆட்டோகிராப்: மூன்று காலங்களில் மூன்று நபர்களுடன் ஏற்படும் காதல் என அழகாக செதுக்கி இருப்பார் இயக்குனர் சேரன். இந்த திரைப்படத்தின் நாயகனுக்காக தளபதி உட்பட பல்வேறு தமிழ் முன்னணி நடிகர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார் இயக்குனர் சேரன். யாரும் ஒப்புக்கொள்ளாத நிலையில் அவரே நாயகனாக களமிறங்கினார். அந்த ஆண்டுக்கான தேசிய விருது வென்றது இப்படம்.

ரன்: மாதவன் மீராஜாஸ்மின் நடிப்பில் பட்டையை கிளப்பிய படம் ரன். இந்த கதைக்காகவும் இயக்குனர் முதலில் பேச்சு வார்த்தை நடத்தியது தளபதி விஜயுடன் தான். பேச்சு வார்த்தை தோல்வியில் முடியவே மாதவனை இரண்டாவது சாய்ஸாக எடுத்தனர். எப்போதும் எடுத்த பணியை சிறப்புடன் முடிக்கும் மாதவன் அந்த பெயரை மீண்டும் காப்பாற்றினார்.

அனேகன்: இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்து வெற்றி நடைபோட்ட படம் அனேகன். தனுஷ் தன் நடிப்பின் பிரம்மாண்டங்களை காட்டி மிரட்டி இருப்பார். எனினும் இப்படத்திற்காக தளபதியிடம் தான் பேச்சுவார்த்த நடத்ப்பட்டது.

கதை பிடித்து விட்ட தளபதியோ ஒரு பக்கம் ஜில்லா கத்தி என படு பிசி பிறகு தளபதியே கூறினாராம் தனுஷிடம் கேட்டு பார்க்கும் படி அவருக்கு இந்த மாதிரியான ரோல் செட் ஆகும் என்று. அதேபோல் பேச்சுவார்த்தை நடத்திய படக்குழு மாபெரும் வெற்றியை பரிசாக பெற்றது.
சிங்கம்: தமிழில் தவிர்க்க முடியா இயக்குனர்களில் ஒருவர் ஹரி அதிவேக திரைக்கதை அதிநுட்பமான கதை என எப்போதும் ரசிகர்களை இருக்கையோடு கட்டி வைப்பதில் வல்லவர்.

சிங்கம் படம் தமிழில் சூர்யா நடிப்பில் வெளியாகினாலும் இந்தி தெலுங்கு என அனைத்துபகுதிகளிலும் கவரப்பட்டது எல்லோரும் அறிந்ததே. மூன்று பாகங்களாக வந்த சிங்கம் முதல் பாகமே தளபதியிடம் தான் வந்து சேர்ந்ததாம். சில காரணங்களுக்காக தளபதி ஒப்புக்கொள்ளாமல் போகவே சூர்யாவிடம் பேசி முடித்து படக்குழு. ஏற்கனவே ஆறு வேல் படங்களில் ஹரியுடன் இணைந்த சூர்யா மீண்டும் ஹரியுடன் இணைந்தார்.
முதல்வன்: ஆக்சன் கிங் அர்ஜுன் நடிப்பில் சங்கர் இயக்கிய மெகாஹிட் படம் முதல்வன். இந்த படத்தற்காக முதலில் பேசப்பட்டது தளபதி விஜயுடன் தான் ஆனால் அந்த நேரங்களில் தளபதி அரசியல் சார்ந்த படங்களை அப்போது வரை நடித்திராத விஜய் மறுக்கவே வாய்ப்பு அர்ஜுனுக்கு போனது.
