திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

கணவர் இறந்ததால் 2வது திருமணம் செய்யும் 43 வயது விஜய் பட நடிகை.. அதுவும் 10 வயது குறைந்த நபருடனா.?

சமீபகாலமாக தமிழ் படங்களில் ஹீரோ, ஹீரோயினை தாண்டி துணை கதாபாத்திரங்களில் நடிக்கும் நாயகியின் தோழி, ஆண்டி ஹீரோயின் போன்ற துணை நடிகைகளை ரசிகர்கள் டிரண்டாக்கி வருகிறார்கள். சமீபத்தில் வெளியான ஜகமே தந்திரம் படத்தில் அந்த நடிகை ஆடிய ஒரு டான்ஸ் ஸ்டெப்புக்காக அவரை ட்ரென்ட் செய்து ரசிகர் பக்கம் கூட ஆரம்பித்து விட்டனர்.

அப்படி துணை நடிகையாக நடித்து பிரபலமானவர் தான் பிரபல தெலுங்கு நடிகை சுரேகா வாணி. இவர் தெலுங்கில் பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார். தமிழில் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார்.

இவர், தமிழில் உத்தமபுத்திரன், தெய்வத்திருமகள், ஜில்லா, பிரம்மா, எதிர்நீச்சல், மெர்சல், விஸ்வாசம், உள்பட பல படங்களில் நடித்துள்ளார். அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வந்த சுரேகா வாணி குறித்து சமீபகாலமாக எந்த ஒரு செய்தியும் வெளிவராமல் இருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

இவரது கணவர் சமீபத்தில் காலமானார்.  இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது 43 வயதாகும் சுரேகா வாணி இரண்டாம் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாகவும், அவர் இவரை விட 10 வயது குறைவானவர் என்றும் கூறப்பட்டது. இந்த திருமணத்துக்கு அவரது மகளும் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

surekha vani
surekha vani

இந்நிலையில் கணவர் மறைந்து இன்னும் ஒரு ஆண்டு கூட நிறைவடையவில்லை அதற்குள் அடுத்த திருமண ஏற்பாடா என்று ரசிகர்கள் ஒரு பக்கம் கேட்டு வருகின்றனர். ஆனால் இதுபோன்று எண்ணம் தனக்கு இல்லை என்று அவரை வெளிப்படையாக கூறிய பின்னும் கோலிவுட்டை என்ற செய்தி சுற்றி தான் வருகிறது. மேலும் சினிமாவில் தொடர்ந்து நடித்து கொண்டு தன் இருப்பேன் என சுரேகா கூறி உள்ளார்.

Trending News