இந்திய சினிமாவின் முக்கிய நடிகராக வலம் வரும் பிரபாஸ் அடுத்ததாக 500 கோடி பட்ஜெட்டில் நடிக்க இருக்கும் படத்தில் பிரபல தமிழ் நடிகை இணைய உள்ள செய்தி மற்ற நடிகைகளை பொறாமைப்பட வைத்துள்ளது.
பாகுபலி படங்களுக்கு பிறகு பிரபாஸின் சினிமா மார்க்கெட் பற்றி சொல்லி தெரிய வேண்டியது இல்லை. பிரபாஸ் நடிக்கும் ஒவ்வொரு படங்களும் அளவுக்கு மீறிய பட்ஜெட்டில் வெகு பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.
அடுத்தடுத்து பிரபாஸ் நடிப்பில் 400 கோடி பட்ஜெட்டில் ராதே ஷ்யாம், 500 கோடி பட்ஜெட்டில் ஆதி புருஷ், 300 கோடி பட்ஜெட்டில் கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் போன்ற படங்கள் உருவாகி வருகின்றன.
இதில் ராதேஷ்யாம் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பிரபாஸ் சலார் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து விரைவில் ஆதி புருஷ் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதற்காக பிரத்யேகமாக வில் பயிற்சியும் கற்றுள்ளாராம்.
ராமாயணத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை வைத்து உருவாகும் ஆதி புருஷ் படத்தில் ராமனாக பிரபாஸ் நடிக்கிறார். மேலும் ராவணனாக பிரபல ஹிந்தி நடிகர் சைப் அலிகான் நடிக்க உள்ளார். இந்த படத்தில் முதல் முறையாக பிரபாஸுக்கு ஜோடியாக சீதையாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ள செய்தி தான் தற்போது பல முன்னணி நடிகைகளை வைத்து வயிற்ரெறிச்சல் பட வைத்துள்ளது.
கீர்த்தி சுரேஷ் உடல் எடையை குறைத்ததை காரணம் காட்டி அவரை சினிமாவில் இருந்து துரத்த பலரும் முயற்சி செய்துள்ளனர். ஆனால் தற்போது அடுத்தடுத்து தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடுவது பல நடிகைகளுக்கு பொறாமையே ஏற்படுத்தியுள்ளதாம்.
கீர்த்தி சுரேஷ் விஜய்யுடன் பைரவா படத்தில் நடித்த பிறகு தான் முன்னணி நடிகர்களின் பார்வை அவர் மீது விழுந்தது. அதனைத் தொடர்ந்து சர்கார் படத்தில் நடித்திருந்தார்.