ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

துரத்தி விட்டதால் தொழிலதிபரை கை பிடித்த விஜய் பட நடிகை.. குழந்தை, குட்டின்னு செட்டிலான சோகம்

மாஸ் ஹீரோவாக பாக்ஸ் ஆபிஸை கலக்கிக் கொண்டிருக்கும் விஜய் உடன் இணைந்து நடித்து விட வேண்டும் என்பதே ஒவ்வொரு இளம் நாயகியின் கனவாக இருக்கிறது. அப்படி ஒரு கனவுடன் என்ட்ரி கொடுத்தவர் தான் அந்த நடிகை. வந்த வேகத்திலேயே விஜய் உட்பட அனைத்து முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்து ஒரு ரவுண்டு வந்தார்.

ஆனால் இப்பொழுது அவர் சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கிறார். அவர் வேறு யாரும் கிடையாது விஜய்யுடன் சிவகாசி, போக்கிரி, காவலன் போன்ற படங்களில் இணைந்து நடித்த அசின் தான். தமிழில் முன்னணி அந்தஸ்தில் இருந்த போதே பாலிவுட் மோகத்தின் காரணமாக இவர் ஹிந்தி திரையுலகில் அடி எடுத்து வைத்தார்.

Also read: திரிஷாவுடன் போட்டி போட்டு மூக்குடைந்த நடிகை.. லியோவால் களத்தில் குதிக்கும் குளிர்பான நடிகை

ஆனால் தமிழில் கிடைத்த வரவேற்பு அவருக்கு அங்கு கிடைக்கவில்லை. நடித்த ஒரு சில திரைப்படங்களும் தோல்வியையே தழுவியது. அதனால் பாலிவுட் திரையுலகம் இவரை அடித்து துரத்தி விட்டது. அதை தொடர்ந்து இவர் தமிழ் பக்கமும் வரப் பிடிக்காமல் ஒரு தொழிலதிபரை தேடி போய் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவருடைய காதல் கதையைக் கேட்டால் ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் இருக்கும். ஏனென்றால் கஜினி திரைப்படத்தில் செல்போன் கம்பெனி ஓனரை இவர் காதலிப்பது போல் நடித்திருப்பார். நிஜ வாழ்க்கையிலும் அப்படி ஒருவரை தான் இவர் கைபிடித்து இருக்கிறார். அதாவது நடிகர் அக்ஷய்குமார் உடன் அசின் நட்பாக பழகியது அனைவருக்கும் தெரியும்.

Also read: விஜய்யையே மெர்சலாக்கிய 4 நடிகர்கள்.. விழுந்து விழுந்து சிரிக்க வைத்த கிங்ஸ்லி

அந்த பழக்கத்தின் அடிப்படையிலேயே அவருடைய நண்பரான மைக்ரோ மேக்ஸ் இணை நிறுவனர் அசினுக்கு பழக்கமாகி இருக்கிறார். ஒரு விமான பயணத்தில் அவரை சந்தித்த அசின் பெரிதாக ஆர்வம் காட்டாமல் ஹாய் என்று சொல்வதோடு நிறுத்திக் கொண்டாராம். அதன் பிறகு அக்ஷய் குமார் மூலம் இவர்களின் நட்பு காதலாக மாறி இருக்கிறது.

அதைத்தொடர்ந்து சினிமாவிலும் கெட்ட நேரம் வாட்டி வதைப்பதை உணர்ந்து கொண்ட அசின் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிடலாம் என்று முடிவெடுத்தார். அதன்படி இவர்களுடைய திருமணம் கலந்த 2016 ஆம் ஆண்டு கோலாகலமாக நடைபெற்றது. தற்போது இவர் தன் கணவரின் பிசினஸில் உதவியாக இருந்து கொண்டு குழந்தை, குட்டி என வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Also read: விஜய்யையே மெர்சலாக்கிய 4 நடிகர்கள்.. விழுந்து விழுந்து சிரிக்க வைத்த கிங்ஸ்லி

Trending News