ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

விஜய் வைத்து படத்தை இயக்க ஆசை.. மனம் தாங்காமல் வெளியில் சொன்ன பிரபலம்

தளபதி விஜய்யின் நடிப்பில் படத்தை இயக்குவது என்பது தனது நீண்டநாள் ஆசை என இயக்குனர் மற்றும் நடிகரான சுந்தர் சி தெரிவித்துள்ளார். இயக்குனர் சுந்தர் சி இயக்கும் திரைப்படங்களில் காமெடிக்கும், கவர்ச்சிக்கும் பஞ்சமே இருக்காது.

அதிலும் முக்கியமாக நடிகர் கார்த்திக்கின் நடிப்பில் வெளியான உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி திரைப்படங்கள், நடிகர் பிரஷாந்த் நடிப்பில் வெளியான வின்னர் மற்றும் சுந்தர் சி இயக்கி நடித்த அரண்மனை சீரிஸ் திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்களாகும் .

இதனிடைய சில காலங்களுக்கு முன்பு சுந்தர் சி பதிவிட்டிருந்த ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அந்த பதிவில், தன்னுடைய இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான அன்பே சிவம் திரைப்படம் பெரிய அளவில் ஓடவில்லை என்றாலும் நல்ல ஒரு திரைப்படம் என்ற பெயரை வாங்கியது

மேலும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் தான் இயக்கிய அருணாச்சலம் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றுத்தந்தது. அதே போல தல அஜித் நடிப்பில் தான் இயக்கிய உன்னை தேடி திரைப்படமும் வெற்றி பெற்றது. ஆனால் நடிகர் விஜய்க்கு அப்போதிருந்த காலத்திலேயே தான் கதையை எழுதி இருந்தேன். ஆனால் அந்த சமயத்தில் சில சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக விஜய்யுடன் கைகோர்க்கும் முடியாமல் இருந்தது.

ஆனால் தற்போது விஜய்க்காக ஒரு கதையை எழுதி உள்ளேன் இந்த கதையை கேட்டு விஜய் சம்மந்தம் தெரிவித்தால், கண்டிப்பாக அவருடன் சேர்ந்து படம் இயக்குவேன் என சுந்தர் சி தெரிவித்துள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் முக்கிய நான்கு முன்னணி நடிகர்களுடன் படம் இயக்கி விட்டேன் என்ற திருப்தியோடு நான் இருப்பேன் என்றும் சுந்தர்.சி அந்த ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்

தளபதி விஜய் தற்போது இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 உள்ளிட்ட திரைப்படங்களில் நடிக்க உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு தளபதி விஜயின் நடிப்பில் படம் இயக்க ஆசை தெரிவித்த நிலையில், சுந்தர் சியும் தனது ஆசை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News