தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் அடுத்தடுத்து தோல்வியை பித்து வரும் நிலையில் ரசிகர்களும் விமர்சகர்களும் அதிருப்தி அடைந்து வருகின்றனர். இது பற்றி பலரும் பேசி வரும் நிலையில் தற்போது பிரபல இயக்குனர் பேரரசு பேட்டி அளித்துள்ளார்.
அதில் தளபதி விஜய்யின் வளர்ச்சியை பற்றியும் அவர் தேர்ந்தெடுக்கும் கதைகளை பற்றியும் வெளிப்படையாக பேசியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்த இயக்குனர் பேரரசு, தளபதி விஜய்யின் திருப்பாச்சி, சிவகாசி உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்து தளபதி விஜய்யின் மார்க்கெட்டை தூக்கி கொடுத்தவர்.
இதனிடையே தளபதி விஜய் தற்போது மிகப்பெரிய உச்சத்தில் இருந்து வரும் நிலையில், புதிய இயக்குனர்கள் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஒரு படத்தை மட்டும் இயக்கி ஹிட் கொடுத்து விட்ட இயக்குனர்களை நம்பி, விஜய் அவர்களின் திரைப்படங்களில் நடிப்பது என்பது சரியானதாக அல்ல. மேலும் கண்டிப்பாக தளபதி விஜய், தான் நடிக்கும் திரைப்படங்களின் கதைகளை நன்கு கேட்ட பிறகு படங்களில் நடிக்க வேண்டும் என்று பேரரசு தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது தளபதி விஜய்க்காக இரண்டு மூன்று கதைகளை தான் எழுதி உள்ளதாகவும், தளபதி விஜய் தன்னை அழைத்து கதை கேட்டால் நான் கண்டிப்பாக அவரை வைத்து ஒரு மாஸ் திரைப்படம் கொடுப்பேன் என்றும் பேரரசு உறுதியளித்துள்ளார். மேலும் பழைய விஜய்யை நான் ஒரு ரசிகனாக மிஸ் பண்ணுவதாகவும் பேரரசு தெரிவித்துள்ளார்.
ஏனென்றால் தற்போது தளபதி விஜய் கிராமப்புற மக்களுக்காக நடிப்பதை ஒரடியாக நிறுத்தி உள்ளார். நான் அவரை வைத்து படம் பண்ணினால் கண்டிப்பாக கிராமப்புற வாழ்க்கை விஜய் ரசிகர்களிடம் மீண்டும் காண்பிப்பேன் என பேரரசு தெரிவித்துள்ளார். மேலும் ஒரு கதைக்காக ஹீரோக்களை செலக்ட் பண்ணுவது தான் சரியான முறை ஹீரோக்களுக்காக கதை எழுதுவது என்பது சரியாக அமையாது என்று பேட்டி அளித்துள்ளார்.
மேலும் இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜிவி பிரகாஷ் நடித்து வரும் அனைத்து திரைப்படங்களும் நல்ல முறையில் ஓடிக் கொண்டிருக்கிறது. அது மட்டுமின்றி ஜிவி பிரகாஷ் கிட்டத்தட்ட பல புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளித்து வருகிறார். இந்த நிலையில் ஜிவி பிரகாஷின் இந்த செயல் போல மற்ற நடிகர்களும் செய்தால் நன்றாக இருக்கும் என பேரரசு தெரிவித்தார்.