வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய்க்காக பல வருடமாக காத்திருக்கும் இயக்குனர்.. இப்ப வரைக்கும் ஒன்னு சேர முடியல

விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. வாரிசு திரைப்படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். சமீபத்தில் வாரிசு படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடியோக்கள் வெளியாகின. இதனால் வாரிசு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் வாரிசு படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்க இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர். இதற்காக லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்திற்கான கதையை எழுதி வருகிறார். கூடிய விரைவில் தளபதி 67 படப்பிடிப்பு நடக்கும் என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

Also Read :பிரசாந்த் படத்தை தவறவிட்ட விஜய்.. தளபதி நடிச்சிருந்தா செமையா இருந்திருக்கும்

நீண்ட வருடமாக விஜய்யை வைத்து படம் இயக்க வேண்டும் என பிரபல இயக்குனருக்கு ஆசை இருந்துள்ளது. அதற்காக பலமுறை முயற்சி செய்துள்ளார். ஆனால் அதற்குள்ளே ஏதாவது ஒரு இயக்குனர் விஜய்யை வைத்து படத்தை இயக்க முன் வந்து விடுகிறார்கள். இதனால் தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அதாவது தடம் படத்தை எடுத்த மகிழ்திருமேனி விஜய்யை வைத்து படம் எடுக்க முயற்சித்துள்ளார். அதாவது தளபதி 67 படத்தையே முதலில் எப்படியாவது விஜய் வைத்து எடுத்து விட வேண்டும் என முயற்சித்துள்ளார். ஆனால் அதற்குள்ளே லோகேஷ் கனகராஜ் பட வாய்ப்பை பெற்று கொண்டுள்ளதால் மகிழ் திருமேனி விஜயை வைத்து படத்தை இயக்க முடியவில்லை.

Also Read : விஜய்யிடம் வாங்க வேண்டிய அடி.. கடைசி நேரத்தில் எஸ்கேப் ஆன அர்ஜுன்

ஆனால் தளபதி 67 படத்திற்கு பிறகு விஜய்யை வைத்து கண்டிப்பாக மகிழ்திருமேனி படத்தை இயக்குவேன் என தெரிவித்துள்ளார். மேலும் அதற்கான வாய்ப்பு கிடைக்க வேண்டுமெனவும் விஜய் அவர்கள் வாய்ப்பு கொடுத்தால் படத்தை இயக்க தற்போதுகூட ரெடியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னுடைய இயக்கத்தில் விஜய் சார் நடிப்பதாக இருந்தால் கண்டிப்பாக ஒரு வித்தியாசமான கதைக்களமாக இருக்கும் இதுவரைக்கும் விஜய் அவர்கள் நடிக்காத ஒரு வித்தியாசமான கதாபாத்திரமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் விஜய் அவர்களை வைத்து படம் இயக்குவது தன்னுடைய கனவு எனவும் தெரிவித்துள்ளார்.

Also Read : மொத்த யூனிட்தையும் குழப்பும் விஜய்.. வாரிசு படத்தில் காட்டும் கஞ்சத்தனம்

Trending News