விஜய் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பீஸ்ட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்ததாக தளபதி 66 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்க உள்ளார் என்பதும் அந்த படத்தை தெலுங்கு சினிமாவின் டாப் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க உள்ளார் என்ற தகவலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இவ்வளவு தமிழ் இயக்குனர்கள் இருக்கும்போது விஜய் ஏன் திடீரென ஒரு தெலுங்கு இயக்குனருடன் தமிழ் சினிமா தமிழ் சினிமா கைகோர்க்கிறார் என்ற சந்தேகம் கோலிவுட் வட்டாரத்தில் எக்கச்சக்கமாக உள்ளது. அதற்கு காரணம் சமீப காலமாக விஜய்யின் படங்கள் தெலுங்கில் தாறுமாறாக வசூலை குவித்து வருவதால் அங்கேயும் தன்னுடைய மார்க்கெட்டில் நிலைமையை உயர்த்தக் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அதற்கு உறுதுணையாக அவரது மேனேஜர் ஜெகதீஷ் இருப்பதாகவும் கூறுகின்றனர்.
இது ஒருபுறமிருக்க தற்போது விஜய் நடித்து வரும் பீஸ்ட் திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் படம் என்பதை ஏற்கனவே அறிவித்து விட்டனர். அதற்கு தகுந்தாற்போல் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியாகும் புகைப்படங்களும் வீடியோக்களும் அதை உறுதி செய்து விட்டன.
இந்நிலையில் அடுத்ததாக தளபதி அறுபத்தி ஆறு படம் எப்படி இருக்கப் போகும் என்ற எதிர்பார்ப்பு சாதாரணமாகவே ரசிகர்கள் மத்தியில் ஒருவிதமான எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதில் ஆச்சரியமில்லை. ஆனால் அது எப்படி இருக்கப் போகிறது என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. காரணம் தெலுங்கு சினிமாவில் மசாலாப் படங்களில் சண்டைக்காட்சிகள் நம்பத்தகாத வண்ணம் ஓவர்டோஸ் ஆக இருப்பதை அனைவரும் அறிந்ததே.
இந்த வகையில் விஜய்யின் படமும் அப்படித்தான் இருக்குமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் தான் சமீபத்தில் தளபதி 66 படத்தின் இயக்குனர் வம்சி பைடிபல்லி ஒரு பேட்டியில் தளபதி அறுபத்தி ஆறு படம் முழுக்க முழுக்க எமோஷனல் கலந்த கமர்சியல் மசாலா திரைப்படம் என்பதை தெரிவித்துள்ளார்.
வம்சி பைடிபல்லி ஏற்கனவே இயக்கிய தோழா மகரிஷி போன்ற படங்களில் எமோஷனல் மிகவும் ஸ்ட்ராங்காக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக மொத்தத்தில் தளபதி ரசிகர்களுக்கு ஒரு பக்கா கமர்சியல் ஃபேமிலி என்டர்டைன்மென்ட் படம் ரெடி என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.