வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஓவர் சீன் உடம்புக்கு ஆகாது.. விஜய் பட நடிகையை கழட்டிவிட்ட சூப்பர் ஸ்டார்

Actor Vijay: பொதுவாக ஒரு சில நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஒப்பந்தமான படத்திலிருந்து சில காரணங்களுக்காக விலகுவது என்பது இயல்பாக நடக்கும் ஒன்று. ஆனால் பிரபல நடிகை ஒருவர் ஓவர் சீன் போட்டு படக்குழுவால் நீக்கப்பட்டிருக்கிறார். அவருடன் சேர்ந்து அந்த படத்திற்கு ஒப்பந்தமான இசையமைப்பாளரும் நீக்கப்பட்டு இருப்பது தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது.

2010-ல் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்து பெண் இந்திய சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் தான் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் நடிகர் ஜீவா உடன் முகமூடி படத்தில் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகினார். அதன் பின்னர் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

Also Read:கவர்ச்சியை மட்டுமே வைத்து தூண்டில் போடும் 5 நடிகைகள்.. கண்ணா பின்னானு அலையும் பூஜா ஹெக்டே

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து பீஸ்ட் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு பூஜா ஹெக்டேவின் நடவடிக்கைகள் கொஞ்சம் மாறிவிட்டதாகவும், விஜய்க்கு ஜோடியாக நடித்ததால் கொஞ்சம் ஓவராக சீன் போடுவதாகவும் தெரிகிறது. மேலும் தென்னிந்திய சினிமாவில் இவர் மீதான பார்வை என்பது தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை என மாறிவிட்டது.

இவருடைய இந்த ஓவர் ஆட்டிட்யூட் காரணத்தால் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் படத்திலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். தெலுங்கு சினிமாவில் தளபதி விஜய்க்கு இணையாக பெயரும் புகழும் கொண்ட மகேஷ் பாபு குண்டூர் காரம் என்னும் திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க தான் பூஜா ஒப்பந்தமாகி தற்போது விலக்கப்பட்டு இருக்கிறார்.

Also Read:பான் இந்தியா ஹீரோக்களுடன் நடித்தும் மண்ணை கவ்விய பூஜா ஹெக்டே.. அடி மேல அடி வாங்கிய 4 பிளாப் படங்கள்

தற்போது பூஜா ஹெக்டேவுக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் நடிகை த்ரிஷா நடிப்பதற்கும் அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. த்ரிஷா மற்றும் மகேஷ் பாபு ஏற்கனவே ஒக்கடு படத்தில் நடித்து படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. தற்போது த்ரிஷா தளபதி விஜயுடன் இணைந்து இளியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இந்த படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தமான தமன் படத்தில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இவரும் சமீபத்தில் விஜய்யின் வாரிசு படத்திற்கு இசையமைத்தது குறிப்பிடத்தக்கது. தமனுக்கு பதிலாக இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

Also Read:கவர்ச்சியில் திணறடித்த பீஸ்ட் பட நடிகை.. அதுக்குன்னு இப்படியா டிரெஸ்ஸ கிழிச்சுட்டு அலைகிறது

Trending News