பிரமாண்டத்திற்கு வேறு பெயர் வைக்க வேண்டும் என்று விரும்பினால் கலைப்புலி எஸ் தாணு என்று பெயர் வைக்கலாம். அந்தளவுக்கு தன்னுடைய ஒவ்வொரு படங்களையும் பிரம்மாண்டமாக தயாரித்து பெரிய அளவில் விளம்பரங்கள் செய்வார்.
சமீபகாலமாக கலைப்புலி எஸ் தாணுவுக்கு சுக்கிரன் உச்சத்தில் இருக்கிறான் போல. எடுக்கும் படம் எல்லாம் நூறு கோடி 200 கோடி வசூல் சாதனை செய்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தனுஷை வைத்து தயாரித்த அசுரன் மற்றும் கர்ணன் இரண்டு படங்களும் வசூலில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கின்றன.
ஆனால் கலைப்புலி எஸ் தாணுவுக்கு ஆரம்ப காலகட்டங்களில் சில பிரமாண்ட திரைப்படங்கள் அவரை பெரிய கடனாளியாக மாற்றியது இன்றைய இளைஞர்கள் பலருக்கும் தெரியாத ஒன்று. யானைக்கும் அடி சறுக்கும் தானே.
அந்த வகையில் கலைப்புலி எஸ் தாணு மற்றும் கமல் கூட்டணியில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி முதல் நாள் முதல் காட்சியை கூட தாண்டாத திரைப்படம்தான் ஆளவந்தான். ஆளவந்தான் படத்தால் பல கோடி கடனுக்கு உள்ளாக்கப்பட்டார் கலைப்புலி எஸ் தாணு.
அந்தக் கடனை எல்லாம் விஜய் நடிப்பில் வெளியான சச்சின் படம்தான் அடைக்க உதவியது என அப்போதே ஒரு பத்திரிக்கைக்கு ஓப்பனாக பேட்டி கொடுத்துள்ளார் கலைப்புலி எஸ் தாணு. இதனை தளபதி ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.

இன்றுவரை சச்சின் திரைப்படம் விஜய்யின் கேரியரில் ஒரு தோல்விப் படமாக கருதப்பட்டு வருகிறது. ஆனால் தொலைக்காட்சிகளில் ஒவ்வொருமுறை ஒளிபரப்பப்பும் போதும் சச்சின் படத்தை பார்க்க ஒரு தனி கூட்டமே இருக்கிறது. அப்போதே சச்சின் திரைப்படம் சென்னையில் மட்டும் 65 லட்சம் வசூல் செய்ததாக குறிப்பிட்டுள்ளார் தாணு. கடைசியாக விஜய்யை வைத்து தெறி என்ற பிளாக்பஸ்டர் படத்தை தயாரித்து இருந்தார் என்பதும் கூடுதல் தகவல்.
