புதன்கிழமை, பிப்ரவரி 19, 2025

தலைவருடன் ஆட்டம் போடும் விஜய் பட நடிகை.. காவாலய்யா தமன்னாவுக்கு போட்டியா.?

Rajini: வேட்டையன் படத்தை தொடர்ந்து ரஜினி இப்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

இப்படத்தில் நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் என ஏகப்பட்ட பிரபலங்கள் இணைந்துள்ளனர். அவர்களுடன் தற்போது ஜனநாயகன் பட ஹீரோயின் பூஜா ஹெக்டேவும் இணைந்துள்ளார்.

ஆனால் இவர் ஒரு பாடலுக்கு மட்டும் தான் நடனமாட இருக்கிறார். ஜெயிலர் படத்தில் எப்படி தமன்னா ஒரு பாடலுக்கு ஆடி ட்ரெண்ட் ஆனாரோ அப்படி ஒரு சர்ப்ரைஸ் கூலி படத்தில் இருக்கிறது.

காவாலய்யா பாடலுடன் போட்டி போடும் வகையில் இந்த சாங் இருக்கும் என்கின்றனர். ஏற்கனவே பூஜா புட்டபொம்மா பாடலுக்கு அல்லு அர்ஜுன் உடன் ஆடி ஃபேமஸ் ஆனார்.

காவாலய்யா தமன்னாவுக்கு போட்டியா.?

அதேபோல் நிச்சயம் தலைவருடன் அவர் ஆடப்போகும் இந்த பாடலும் ட்ரெண்டிங்கில் இடம் பிடிக்கும். தற்போது அவர் ஒரு பாடலுக்கு ஆட சம்மதித்திருக்கும் நிலையில் விரைவில் ஷூட்டிங் நடைபெற உள்ளது.

இந்த தகவல் தற்போது கசிந்திருக்கும் நிலையில் தலைவரின் ரசிகர்கள் குஷியாகி விட்டனர். பார்க்கலாம் பூஜா தமன்னாவை ஓவர் டேக் செய்வாரா என.

Trending News