வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ராசி இல்லை என ஓரம் கட்டப்பட்ட விஜய் பட ஹீரோயின்.. மார்க்கெட் சரிந்ததால் எடுத்த அதிரடி முடிவு

Actor Vijay: பாக்ஸ் ஆபிஸ் ஹீரோவாக தெறிக்கவிடும் விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்பது வளர்ந்து வரும் நடிகைகள் முதல் டாப் நடிகைகள் வரை அனைவருக்கும் இருக்கும் கனவாக இருக்கிறது. அப்படி விஜய்யுடன் நடித்து கோலிவுட் மார்க்கெட்டை பிடிக்கலாம் என்று நினைத்த நடிகை ஒருவர் தற்போது ராசி இல்லாத நடிகை என முத்திரை குத்தப்பட்டுள்ளார்.

அந்த வகையில் தமிழில் அறிமுகமாகி இருந்தாலும் தெலுங்கு திரையுலகில் அதிக பிரபலமானவர் தான் பூஜா ஹெக்டே. ஹிந்தியிலும் தன் முத்திரையை பதித்த இவர் மீண்டும் விஜய்யின் பீஸ்ட் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். விஜய் படத்தில் நடித்தாலே அடுத்தடுத்த வாய்ப்புகள் குவியும் என்ற எண்ணத்தில் பக்கா பிளான் போட்டு வந்த இவருக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது.

Also read: அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் விஜய்யின் படம் கிடைக்கும்.. பகிரங்கமாக பேட்டியளித்த நடிகை

சில கலவையான விமர்சனங்களை பெற்ற பீஸ்ட் படத்தால் பூஜாவுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் தமிழில் கிடைக்கவில்லை. ஆனாலும் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் அவர் பிஸியாகவே இருந்தார். அந்த வகையில் அவர் அடுத்தடுத்து டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்ற நிலையில் தற்போது அதுவும் பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டது.

அதாவது கடந்த வருடம் அவர் நடித்த ஆச்சர்யா, சர்க்கஸ் உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதைத்தொடர்ந்து அண்மையில் வெளிவந்த கிசி கா பாய் கிசி கி ஜான் திரைப்படம் பயங்கர மொக்கை வாங்கியது. தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த வீரம் படத்தின் ரீமேக் ஆன இப்படம் பாக்ஸ் ஆபிஸ் தோல்வியைப் பெற்றது.

Also read: முழு அரசியல்வாதியாகவே மாறிய விஜய்.. இவ்வளவுதான் உங்க அக்கறையா!

அதனாலேயே இப்போது அவர் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கும் படத்தை தான் பெருமளவில் நம்பிக் கொண்டிருக்கிறார். ஏனென்றால் இந்த படத்தை தவிர அவர் கைவசம் வேறு எந்த படங்களும் இல்லையாம். அதனால் வாய்ப்பை பிடிப்பதற்காகவே அவர் இப்போது ஒரு அதிரடி முடிவை எடுத்து இருக்கிறார்.

என்னவென்றால் பூஜா ஹெக்டே தற்போது தன் சம்பளத்தை வெகுவாக குறைத்து விட்டாராம். அந்த வகையில் தற்போது ஒரு படத்திற்கு 5 கோடி வரை சம்பளமாக வாங்கிக் கொண்டிருந்த இவர் இப்போது 3 கோடி கொடுத்தால் போதும் என்ற நிலைமையில் இருக்கிறாராம். ஆனாலும் அவரை தேடி பட வாய்ப்புகள் தான் ஒன்றும் வந்த பாடில்லை. இதனால் நொந்து போயிருக்கும் அவர் அடுத்ததாக என்ன செய்யலாம் என்று பிளான் போட்டு வருகிறாராம்.

Also read: திருந்தாத விஜய், திருந்தாத அரசியல்வாதிகள்.. தெரிந்தும் மீண்டும் மீண்டும் பிரச்சினையில் மாட்டிக்கொள்ளும் தளபதி.!

Trending News