திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பல வருடம் கழித்து ஆண் குழந்தைக்கு அம்மாவான விஜய் பட நடிகை.. வைரலாகும் வித்தியாசமான பெயர்

Vijay Movie Heroine: இந்திய சினிமாவில் தற்போது பல முன்னணி நடிகைகள் திடீரென திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விடுகிறார்கள். முன்பெல்லாம் மார்க்கெட் குறைந்தால் தான் திருமணம் என்ற நிலை மாறி, தற்போது மார்க்கெட் இருக்கும்பொழுது திருமணம் செய்து கொள்ளும் நடிகைகளும் இருக்கிறார்கள். அந்த வரிசையில் திருமணம் செய்து கொண்டவர்தான் இந்த விஜய் பட நடிகை.

இந்திய சினிமாவில் கொடி கட்டி பறந்த இவர், தமிழ் சினிமாவில் இரண்டே படங்களில் மட்டும் தான் நடித்திருக்கிறார். இந்த நடிகை நேற்று தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தான் ஆண் குழந்தைக்கு தாயாக இருப்பதாக பதிவிட்டு, குழந்தையின் புகைப்படத்தையும், பெயரையும் பகிர்ந்திருந்தார். தற்போது இந்த நடிகையின் மகன் பெயர் தான் சமூக வலைத்தளங்களில் பயங்கரமாக வைரல் ஆகி கொண்டிருக்கிறது.

Also Read:சொல்றது ஒன்னு செய்யறது ஒன்னு.. மைக்கை பிடிச்சா கண்டபடி உளறும் லியோ பட வில்லன்

தமிழில் கேடி என்னும் படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் இலியானா. இந்த படத்தை பார்த்தவர்கள் பலர் இவர் இவ்வளவு பெரிய நடிகையாக இருப்பார் என நினைத்திருக்க மாட்டார்கள். கேடி படுத்திருக்க பிறகு இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக மாறிய இவர், பல வருடங்கள் கழித்து இயக்குனர் சங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த நண்பன் படத்தில் நடித்திருந்தார்.

கவர்ச்சிக்காகவும், காதல் காட்சிகளுக்காகவும் மட்டுமில்லாமல் இந்த படத்தில் இலியானாவுக்கு நல்ல கேரக்டர் கிடைத்திருந்தது. மேலும் இந்த படத்தில் இருக்கானா இடை இருக்கானா, அஸ்கு லஸ்கா போன்ற பாடல்கள் இலியானாவுக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. அதன் பின்னர் இவர் தமிழில் வேறு எந்த படங்களும் பண்ணவில்லை.

Also Read:லியோ ஆடியோ வெளியீடு, மண்ணை அள்ளிப் போட்ட லோகேஷ்.. திருப்பி கொடுக்க நினைத்த தளபதிக்கு விழுந்த அடி

தனக்கு திருமணமானதை எந்த ஒரு சோசியல் மீடியாவிலும் தெரிவிக்காத நடிகை இணையான, கடந்த ஏப்ரல் மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைத்தளத்தில் ரசிகர்களிடம் பகிர்ந்து இருந்தார். சில வாரத்திற்கு முன்னால் தன்னுடைய காதலர் புகைப்படத்தையும் பகிர்ந்திருந்த இவருக்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

                                                                         இலியானாவின் மகன் கோ ஃபீனிக்ஸ் டோலன்

Baby
Baby

நேற்றைய தினம் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தான் ஆண் குழந்தைக்கு தாயாகி இருப்பதாக பதிவிட்டிருந்த இவர், குழந்தையின் புகைப்படத்தையும், தன்னுடைய மகனின் பெயர் கோ ஃபீனிக்ஸ் டோலன் எனவும் பதிவிட்டிருந்தார். பீனிக்ஸ் பறவையை குறிக்கும் இந்த பெயர் தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கரமாக வைரல் ஆகி வருகிறது.

Also Read:விஜய்யை போலவே அசிங்கப்பட்ட நடிகர்.. வழுக்கைத் தலை, கேவலமான மீசை என அடியோடு வெறுக்கப்பட்ட ஹீரோ

Trending News