தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவரது நடிப்பில் தற்போது பீஸ்ட் திரைப்படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார்.
சமீபகாலமாக பிரபலங்களைப் பற்றிய பல்வேறு விதமான செய்திகள் வெளியாகி வருகின்றன. அதிலும் ஒரு சில பிரபலங்களை பற்றி வெளிப்படையாக பல்வேறு கருத்துக்களை கூறிய பல சர்ச்சைகளையும் உருவாக்கியுள்ளனர். விஜய் பற்றி பல்வேறு விதமான சர்ச்சை கருத்துக்களை பலர் கூறியுள்ளனர்.
ஆனால் விஜயின் அப்பா எஸ்ஏ சந்திரசேகர் விஜயின் ஜாதியை பற்றி கேட்டால் நான் கோபப்பட்டு விடுவேன் என கூறிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது அதுமட்டுமில்லாமல் விஜயின் பெயர் வைப்பதற்கு என்ன காரணம் எனவும் பலரும் கேட்டு வந்தனர். அதற்கு எஸ் ஏ சந்திரசேகர் வெளிப்படையாக ஒரு மேடையில் கூறியுள்ளார்.
அதாவது ஹிந்தி பட கதையாசிரியர் சலீம் இயக்கும் அனைத்து படத்திலும் கதாநாயகர்களுக்கு விஜய் என்றுதான் பெயர் வைப்பாராம், அதேபோல் அமிதாப் என்ற கதை ஆசிரியரும் படத்தில் கதாநாயகனுக்கு விஜய் என்றுதான் பெயர் வைப்பார்களாம். அதனால்தான் எஸ்ஏ சந்திரசேகர் தனது மகனுக்கு விஜய் என பெயர் வைத்ததாக கூறியுள்ளார்.

மேலும் விஜய் பற்றி வரும் தொடர் சர்ச்சைகளை பற்றி இனிமேல் தான் கவலைப்படப் போவதில்லை எனவும் ஆனால் தேவையில்லாத விஷயங்களை கேட்டால் அதற்கான விளக்கங்களை கூட தயாராக இருப்பதாகவும் எஸ்ஏ சந்திரசேகர் கூறினார். அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக பிரபலங்களை பற்றி சர்ச்சைகள் வந்து கொண்டுதான் இருக்கிறது அதனை கட்டுப்படுத்த முடியாது எனவும் தெரிவித்தார்.