Actor Vijay: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் லியோ படத்திற்கு இதுவரை இல்லாத அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. அதிலும் இப்படம் ஆரம்பிக்கும் பொழுது விஜய் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருந்தார். ஆனால் அவர் சமீபத்தில் அந்தத் தோற்றத்தை முற்றிலுமாக மாற்றி மிகவும் இளமையாக காட்சியளித்தார்.
இதுவே பெரும் ஆர்வத்தை தூண்டிய நிலையில் இன்று அவர் பனையூரில் இருக்கும் தன்னுடைய ஆபீஸில் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திப்பதற்காக வந்திருந்தார். அப்போது அவருடைய புது லுக்கை பார்த்த அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் அந்த தோற்றத்தில் அவர் இன்னும் இளமையாக தெரிந்தார்.
Also read: கோமாவில் இருந்த மகன்.. நாசருக்காக தவறாமல் விஜய் கொடுக்கும் சர்ப்ரைஸ்
அது மட்டுமல்லாமல் வழக்கமாக இது போன்ற மீட்டிங் என்றால் விஜய் வெள்ளை நிற சட்டையில் தான் வருவார். ஆனால் இன்று அவர் ப்ளூ கலர் சட்டை அணிந்து வந்திருந்தது பல கேள்விகளை முன் வைக்கின்றது. ஏற்கனவே இவருடைய அரசியல் வருகைக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இதில் அடிக்கடி இவர் திடீர் மீட்டிங் போட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் 234 தொகுதிகளிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியருக்கு விஜய் பரிசுத்தொகை உட்பட பல உதவிகளை செய்தார். அந்த நிகழ்ச்சி மிகப்பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது அவர் நிர்வாகிகளை சந்தித்துள்ளார்.
Also read: தளபதியில் கிடைக்காத மவுசு மணிரத்தினம் படத்தில் கிடைத்தது.. ரசிகைகளை ஏங்க விட்ட சாக்லேட் பாய்
இந்த சந்திப்பில் நடந்து முடிந்த நிகழ்வுக்காக நன்றி தெரிவிப்பது மட்டுமல்லாமல் சில முக்கிய முடிவுகளையும் அவர் எடுக்க இருக்கிறாராம். அதாவது வரும் சட்டமன்ற தேர்தலில் களம் இறங்கும் முடிவில் இருக்கும் விஜய் அதற்கான ஒத்திகையாகவே இந்த மீட்டிங்கை ஏற்பாடு செய்திருக்கிறார்.
இளமையாக காட்சியளித்த விஜய்
![actor-vijay](https://www.cinemapettai.com/wp-content/uploads/2023/07/actor-vijay.webp)
இது ஒரு புறம் இருந்தாலும் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை முக்கிய இடத்தில் நடத்துவது பற்றிய ஆலோசனையும் இந்த சந்திப்பில் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் தற்போது லியோ படத்தில் தன்னுடைய பகுதிகளை முடித்துக் கொடுத்துவிட்ட விஜய் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தும் முடிவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ப்ளூ சட்டை, நியூ லுக் என ஆளே மாறிய விஜய்
![vijay-actor](https://www.cinemapettai.com/wp-content/plugins/gumlet/assets/images/pixel.png)