ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவர் நடிகர் விக்ராந்த். இந்நிகழ்ச்சியை ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் விக்ராந்த் அவரது அண்ணன் தளபதி விஜய் பற்றி பேசி இருந்தார்.
விஜய் சினிமாவுக்கு வந்த ஆரம்பத்தில் பலபேர் அவரை கிண்டல், கேலி செய்ததாகவும் அதைப் பொருட்படுத்தாமல் அவருடைய விடாமுயற்சியினால் இந்த இடத்தை பிடித்துள்ளார் என விஜய் பற்றி விக்ராந்த் பேசியிருந்தார்.
தளபதி விஜயின் சொந்த சித்தி பையன் விக்ராந்த். சர்வைவர் நிகழ்ச்சியில் விக்ராந்த் பேசும்பொழுது விஜய் அண்ணா தன் குடும்பத்திற்கு நிறைய உதவி செய்ததாகவும் வீடு வாடகை கூட கட்ட முடியாத இக்கட்டான சூழ் நிலையில் உள்ளபோது தங்களுக்காக புது வீடு வாங்கி தந்து உதவி உள்ளார் என்று விஜய் பற்றி பேசினார்.
சர்வைவர் நிகழ்ச்சியில் விஜய் படத்தில் உள்ள என்னோட லைலா பாடலை விக்ராந்த் பாடினார். விஜயைப் பற்றி அர்ஜுன் விக்ராந்த் இடம் கேட்டார். விஜய் சந்தித்த அவமானங்கள் பற்றி விக்ராந்த் கூறினார். விஜய் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த ஆரம்ப காலங்களில் இந்த மூஞ்சி எல்லாம் நடிக்கணுமா இதை தியேட்டர்ல போய் பாக்கணுமா என ஒரு பத்திரிக்கையில் விமர்சித்து இருந்தார்கள்.
அதே பத்திரிக்கை 20 வருடத்திற்கு பிறகு விஜயின் வாழ்க்கை வரலாறு எழுதி இருந்தது. விஜய்யின் தனது வீட்டில் இந்த இரண்டு பக்கங்களையும் பிரேம் செய்து வைத்துள்ளாராம். தன்னை விமர்சித்த பத்திரிக்கையை தற்போது தன்னை பாராட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளார் தளபதி.
விஜய் தன்னுடைய தன்னம்பிக்கையால் பல அவமானங்களை சந்தித்து தற்போது மிகப்பெரிய உயரத்தில் உள்ளார். விஜய் அண்ணா தான் எங்கள் குடும்பத்தின் அடையாளம், ஐ லவ் யூ விஜய் அண்ணா என உணர்ச்சி பொங்க விஜய் பற்றி சர்வைவர் நிகழ்ச்சியில் விக்ராந்த் பேசினார்.