Vijay – Seeman: நடிகர் விஜய்யின் அடுத்த நகர்வு என்பது அரசியலை நோக்கி தான் என பலரும் கணித்து இருக்கிறார்கள். அவருடைய நடவடிக்கைகளும் அதற்கு ஏற்றது போல் தான் இருக்கிறது. விஜய்யின் அரசியல் என்ட்ரிக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அரசியலில் வரக்கூடாது என சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், ஒரு சிலரோ விஜய் அரசியலுக்கு வந்தால் தங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என இப்போதிலிருந்து அவருக்கு சப்போர்ட் செய்து வருகிறார்கள்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்திருப்பதால் சினிமாவில் நடக்கும் பல விஷயங்களுக்கு தன்னுடைய கருத்துக்களை தெரிவிப்பார். சினிமாவில் நல்லது கெட்டது என அத்தனைக்கும் அவர் குரல் கொடுத்து இருக்கிறார். ஆனால் சமீப காலமாகவே சீமான் தளபதி விஜய்க்கு கொஞ்சம் ஓவராக முட்டு கொடுக்கிறாரோ என தோன்றுகிறது.
சமீபத்தில் விஜய் நடித்த லியோ படத்தின் டீசர் வெளியான போது, அவர் பேசி இருந்த கெட்ட வார்த்தை மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி இருந்தது. இப்போது மீடியாக்கள் சீமானிடம், இது பற்றிய கேள்வி கேட்ட பொழுது சினிமாவில் யாருமே கெட்ட வார்த்தை பேசவில்லையா, அவர் மட்டும் தான் பேசி இருக்கிறாரா என அந்த சர்ச்சையில் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து இருந்தார்.
லியோ படம் ரிலீஸ் தேதி நெருங்கியதிலிருந்து அந்த படத்திற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதிலும் ரோகினி தியேட்டர் சூறையாடப்பட்ட சம்பவத்திற்கு பிறகு லியோ படத்தில் ரிலீஸுக்கு எக்கச்சக்க கெடுபிடிகள் தான். அதிலும் அந்த படத்தின் தயாரிப்பாளர் நான்கு மணி ஷோவை வாங்கிய தீருவேன் என கோர்ட்டு வரைக்கும் சென்று வந்துவிட்டார்.
இது பற்றி பேசி இருக்கும் சீமான் விஜய் அரசியலுக்கு வருவதால் தான் இப்படி அவருக்கு நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்றன என பேசி இருக்கிறார். சமீப காலமாகவே விஜய்க்கு எதிராக கிளம்பும் நிறைய பிரச்சனைகளுக்கு சீமான் முந்திக்கொண்டு ஆதரவு தெரிவிக்கிறார். ஆனால் விஜய் தரப்பில் இருந்து சீமானுக்கு எந்த ரெஸ்பான்ஸ் கொடுக்கப்படுவது இல்லை.
விஜய் அரசியல் என்ட்ரிக்கு முன்பே அத்தனை அரசியல் ஆட்டத்தையும் கற்று தேர்ந்து விட்டு தான் வருகிறார். இதனால் யாருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பதில் ரொம்பவும் தெளிவாக இருக்கிறார். தன் மீது எந்த கட்சியின் சாயமும் பூசி விடக்கூடாது என்பதில் உஷாராக இருப்பதால்தான், சீமானுக்கு பதில் கொடுக்காமல் இருக்கிறார்.