வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

Vijay: பாட்டு ரெடி, கொடி ரெடி.. தீயா வேலை செய்யும் தளபதியின் தம்பிகள், மிரளும் கட்சிகள்

Vijay: விஜய் கட்சி அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பிருந்தே அரசியல் கட்சிகள் அவருடைய நகர்வை கவனித்து வந்தனர். மக்களுக்கு நலத்திட்டங்கள், மாணவர்களுக்கான உதவிகள் என அவர் தன் இலக்கில் மட்டுமே குறியாக இருந்தார்.

அதை அடுத்து திடீரென கட்சியின் பெயரை அறிவித்ததோடு அடுத்தடுத்த விஷயங்களில் மூலமும் கவனம் ஈர்த்தார். அதன்படி தற்போது அவருடைய கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மக்களுக்கு தேவையான பல உதவிகளை செய்து வருகின்றனர்.

மேலும் கடந்த வருடம் பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விஜய் பரிசு பொருட்கள் வழங்கினார். அதே போன்று இந்த வருடமும் சிறப்பான சம்பவம் நடைபெற இருக்கிறது.

தளபதியின் மாநாடு

இந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் பிரச்சார மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது. 2026 தேர்தலை குறி வைத்திருக்கும் விஜய் இந்த மாநாட்டின் மூலம் ஒரு எதிர்பாராத திருப்பத்தை கொடுக்க இருக்கிறார்.

இதற்கான வேலைகள் அனைத்தும் ஜோராக நடந்து வருகிறது. அதன்படி தற்போது பிரச்சார பாடல், கொடி உள்ளிட்ட அனைத்தும் தயாராகி விட்டது. விஜய் இதை அறிமுகப்படுத்தி தன் பிரச்சாரத்தை தொடங்குவது மட்டும் தான் பாக்கி.

அதற்காக ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டு மொத்த மீடியாக்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். மேலும் மதுரையில் நடக்க இருக்கும் மாநாடு பற்றிய அதிகாரப்பூர்வமான தகவலும் விரைவில் வெளியாக இருக்கிறது.

இதை தற்போது கொண்டாடி வரும் ரசிகர்கள் தளபதியை பார்த்து அரசியல் கட்சிகள் மிரண்டு விட்டார்கள் என ஆர்ப்பரித்து வருகின்றனர். இந்த மாநாடு எந்த மாதிரியான மாற்றத்தை கொண்டு வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News