திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய்யா, விஜய் சேதுபதியா உண்மையை உளறிய ஜவான் ஸ்டண்ட் மேன்.. அட்லீயின் கோபத்தை சம்பாதித்த பைட்டர்

Jawaan Movie: ஜவான் படம் ஷாருக்கான், நயன்தாரா, அட்லீ கூட்டணியால் ஒரு பெரிய எதிர்பார்ப்பையே கிளப்பி வருகிறது. ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.

இந்த படத்தில் பல சுவாரசியங்களை ரகசியமாக வைத்திருக்கிறார் அட்லீ. இந்த படத்தில் விஜய் நடிக்கிறார் என்றும் அவர் கேமியோ ரோல் பண்ணுகிறார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டது. இந்நிலையில் இந்த படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் யானிக் பென் கொடுத்த பேட்டியில், அதை உறுதி செய்துவிட்டார்.

Also Read: தங்க முட்டை போடும் வாத்து நயன்தாரா.. அட்லியால் வந்த சந்தேகம், கண்கொத்தி பாம்பாக மாறிய விக்கி

விஜய் மற்றும் ஷாருக்கான் நடிக்கும் சண்டை காட்சி அருமையாக இருந்தது என்று உளறி விட்டார். இதிலிருந்து இந்த படத்தில் விஜய் நடிக்கிறார் என்பது தெரியவந்தது. ஆனால் அதன் பின் அவர் விஜய் சேதுபதி என்றும், நான் சொன்ன விஜய் வேற என்றும் மழுப்பி வருகிறார். இதனால் அட்லீயின் கோபத்தை சம்பாதித்துள்ளார் ஸ்டண்ட் மாஸ்டர் யானிக் பென்.

அது மட்டுமல்ல இந்த சிறப்பு தோற்றத்திற்காக நடிகர் விஜய் எந்த சம்பளமும் வாங்காமல் நடித்துக் கொடுத்திருக்கிறார். ஏனென்றால் ஷாருக்கான் மற்றும் அட்லீ உடனான நட்பு காரணமாக அவர் பணம் வாங்காமல் நடித்துக் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Also Read: பாலிவுட் சினிமாவை மீட்டெடுக்க வந்த ஜவான்.. ரிலீசுக்கு முன்பே இத்தனை கோடி வியாபாரமா?

இருப்பினும் விஜய் ஜவான் படத்தில் இருக்கிறார் என்பதை படத்தின் ரிலீசுக்கு பின்பு தான் ரசிகர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என இந்த விஷயத்தை சீக்ரெட் ஆக பொத்தி பொத்தி வைத்திருந்தார். ஆனால் அதை இப்படி போட்டு உடைத்து விட்டாரே என்று ஸ்டண்ட் மாஸ்டர் யானிக் பென் மீது அட்லீ கொலை வெறியுடன் இருக்கிறார்.

அதே சமயம் அட்லீ, நயன்தாரா போலவே விஜய்யும் இந்த படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுப்பது தளபதி ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது. அது மட்டுமல்ல இந்த படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் யானிக் பென் சொன்னது போலவே, ஷாருக்கான் மற்றும் விஜய் இருவருக்கும் இருக்கக்கூடிய சண்டைக்காட்சி ரசிகர்களுக்கு மிகப்பெரிய விஷுவல் ட்ரீட்டாக இருக்கப் போகிறது.

Also Read: சூது கவ்வும் ஸ்டைலில் உருவாகும் விஜய் சேதுபதியின் அடுத்த படம்.. ஜோடியாகும் பாலிவுட் நடிகை

Trending News