திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய் இன்று வரை செய்ய முடியாத நன்றிக்கடன்.. தளபதியை சுத்தி சுத்தி அடிக்கும் கர்மா!

Actor Vijay: விஜய்யின் அப்பா இயக்குனர் என்பதால் எளிதில் சினிமாவில் நுழைந்தாலும் அவர் பல கேலி, கிண்டலுக்கு உள்ளானார். அதன் பிறகு தன்னுடைய வீக்னஸ் எது என்று தெரிந்து கொண்டு அதை பிளஸ் பாயிண்ட் ஆக மாற்றி அமைத்துக் கொண்டார். இப்போது யாரும் நினைத்து கூட பார்க்க முடியாத உயரத்தில் விஜய் இருக்கிறார்.

இந்நிலையில் இப்போது விஜய் அரசியலில் இறங்குவதற்கான வேலையை பார்த்து வருகிறார். அந்த வகையில் மாணவ, மாணவியருக்கு நிறைய நல்ல விஷயங்களை செய்து வருகிறார். ஆனாலும் அரசியல் வட்டாரத்தில் இது மிகப்பெரிய சலசலப்பை தான் ஏற்படுத்தி இருக்கிறது. விஜய்க்கு அரசியல் செட்டாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Also Read : பிளாப் சொன்னாலும் எப்படி 100 கோடி வசூலை கொடுக்கும் விஜய் படங்கள்?.. வியாபார யுத்திக்கு பின்னால் இருக்கும் மாபியா கும்பல்

இந்நிலையில் தொடர்ந்து விஜய்க்கு அடுத்தடுத்த பிரச்சனை வருவதற்கான காரணம் தன்னை வளர்த்து விட்ட பிறகு நன்றி கடன் செய்யாதது என சிலர் கூறி வருகிறார்கள். அதாவது விஜய் அரசியலில் வருவதை ஒட்டி பிரேமலதா, விஜயகாந்தை ஃபாலோ செய்யாதீர்கள் என்று கூறியிருந்தார்.

இதற்கு காரணம் விஜய் தங்களது குடும்பத்திற்கு எந்த உதவியும் செய்யாதது என்று கூட சொல்லலாம். ஏனென்றால் ஆரம்பத்தில் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகருக்கு நிறைய படங்களை கொடுத்தவர் விஜயகாந்த் தான். அதோடு மட்டுமல்லாமல் தனது மகனுக்கும் உங்கள் படத்தில் வாய்ப்பு கொடுங்கள் என எஸ்ஏசி கேட்டுக் கொண்டார்.

Also Read : விஜய் வேகவேகமாக அதை செய்தே ஆகணும், இல்லனா காணாம போயிருவாரு.. பயமுறுத்தி விட்ட பிரசாந்த்

அதன்படி விஜய்யை தனது படத்தில் நடிக்க வைத்து பெரியாளாக்கிவிட்டது விஜயகாந்த் தான். இப்போது விஜய் சினிமாவில் நல்ல நிலைமையில் இருக்கும் நிலையில் விஜயகாந்த் குடும்பத்திற்கு உதவி செய்யலாம். அதாவது விஜயகாந்தின் வாரிசான சண்முக பாண்டியன் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க போராடிக் கொண்டிருக்கிறார்.

அவரை தூக்கி விட விஜய் ஏதாவது ஒரு உதவி செய்திருக்கலாம். தன்னை வளர்த்து விட்டவரின் வாரிசை காப்பாற்ற தளபதிக்கு ஏனோ மனமில்லாமல் இருந்து வருகிறார். இன்று வரை அந்த நன்றி கடனை செய்யாமல் விஜய் இருப்பதால்தான் அவரை கர்மா சுத்தி சுத்தி அடிப்பதாக சிலர் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

Also Read : விஜய்யுடன் நடிக்க மறுத்த 3 ஹீரோக்கள்.. உண்மையை போட்டு உடைத்த எதிர்நீச்சல் குணசேகரன்

Trending News