ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ஒரே ஆண்டில் 80 கோடி வரி செலுத்திய தளபதி.. வாயை பிளந்த ரசிகர்கள்

தளபதி தனது கடைசி 69 ஆவது படத்தை முடித்தபிறகு, அரசியலில் முழு கவனம் செலுத்த போகிறார். இவருக்கு சினிமா துறையிலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிகமான வரவேற்பு உள்ளது. திரை துறையில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ஒருவர், அவரது பல கோடி ரூபாய் சம்பளத்தை உதறிவிட்டு மக்கள் சேவையில் ஈடுபடப்போகிறார் என்பதே பெரிய விஷயமாக தான் பார்க்க படுகிறது.

இந்த நிலையில், விஜய் ஒரே ஆண்டில் 80 கோடி ரூபாய் தனி மனித வரி செலுத்தியுள்ளார் என்ற செய்தி ரசிகர்கள் வாயை பிளக்க வைத்துள்ளது. வரி மட்டுமே 80 கோடி என்றால், அவர் சொத்து எவ்வளவு இருக்கும் என்று கூட்டி கழித்து பார்த்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

2023-2024 நிதி ஆண்டில், அதிக வரி செலுத்தும் நடிகர் நடிகைகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார் நடிகர் ஷாருக்கான். அவர் 90 கோடி ரூபாய் வரி செலுத்தி இருந்தார். இரண்டாவது இடத்தில் நடிகர் விஜய் உள்ளார். அவர் 80 கோடி ரூபாய் வரி செலுத்தியுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக தான் சல்மான் கானே இருக்கிறார். அவர் 75 கோடி ரூபாய் வரி செலுத்தியுள்ளார்.

71 கோடி ரூபாய் வரி செலுத்தி அமிதாப் பச்சன் நான்காவது இடத்தில் உள்ளார். ஐந்தாவது இடத்தில் நடிகர் அஜய் தேவ்கன் 42 கோடி வரி செலுத்தியுள்ளார். மேலும் விஜய்க்கு அடுத்தபடியாக நடிகர் அல்லு அர்ஜுன் தான் தென்னிந்திய நடிகர்களில் அதிகம் வரி செலுத்தும் நடிகராக உள்ளார்.. அவர் 14 கோடி ரூபாய் வரி செலுத்தியுள்ளார்.

பொதுவாக இத்தனை கோடி வரி செலுத்தும் ஒரு நடிகர், இன்னும் பல கோடி சம்பாதிக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். ஆனால் தளபதி இந்த பணத்தையெல்லாம் உதறி தள்ளி மக்கள் சேவையில் ஈடுபட போகிறார். எத்தனை பேருக்கு இந்த தைரியமும் எண்ணமும் வரும் என்று நெட்டிசன்கள் தற்போது கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Trending News