சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

மார்பிங்க் செய்யாதீங்க விஜய் மக்கள் இயக்கம் எச்சரிக்கை.. தளபதியை அண்ணாவாக சித்தரித்து போஸ்டர்.!

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். தமிழக அரசியலில் இவருடைய பெயர் அடிபடுவது வாடிக்கையான ஒன்றாகும்.

அவருடைய ரசிகர்களும் இவர் அரசியலுக்கு வர விரும்புவது நாம் அனைவரும் அறிந்ததே. கடந்த தேர்தலின் போது தன்னுடைய வாக்கினை பதிவு செய்ய சைக்கிளில் இவர் வந்தது வைரல் ஆகியது.

சமீபகாலமாக பிற கட்சி தலைவர்களின் படங்களுடன் நடிகர் விஜய் படத்தை இணைத்து பல செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ரசிகர்களுக்கு அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார்.

அதில் நடிகர் விஜய்யை மற்ற தலைவர்களோடு இணைத்து போஸ்டர்கள் ஒட்டுவது அதிகரித்து வருகிறது. இது போன்ற செயல்களை நடிகர் விஜய் விரும்பவில்லை. ஆதலால் இது போன்ற செயல்களை ரசிகர்கள் செய்ய வேண்டாம்.

மேலும் அவ்வாறு செய்திகள் மீண்டும் தொடர்ந்தால் நடிகர் விஜய் அனுமதியோடு அவ்வாறு செய்பவர்கள் மீது இயக்க ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிவரும் என்று தெரிவித்துள்ளார்.

vijay-poster
vijay-poster

Trending News