வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சுயலாபத்திற்காக சூப்பர் ஸ்டாரை சீண்டும் விஜய்.. என்ன கட்டம் கட்டினாலும் உங்க பாட்ஷா பலிக்காது

Actor Rajini and Vijay: விஜய் நடிப்பையும் தாண்டி அரசியலை பதம் பார்ப்பதற்காக பல வேலைகளில் மும்பரமாக இறங்கி விட்டார். எப்பொழுது அரசியலுக்கு வர வேண்டும் என்று முடிவெடுத்தாரோ அப்பொழுதே இவருடைய நடவடிக்கைகள் அனைத்தும் மாறிவிட்டது. நடிப்பையும் தாண்டி அரசியலுக்கு என்னென்ன விஷயங்கள் செய்தால் மக்களின் முழு கவனமும் இவர் மேல திரும்புமோ அதை எல்லாம் கச்சிதமாக செய்து வருகிறார்.

அத்துடன் அரசியலில் ஜெயித்தாக வேண்டும் என்று இவருடைய சுய லாபத்திற்காக தற்போது சூப்பர் ஸ்டாரை சீண்டி வருகிறார். அதாவது ரஜினியின் சூப்பர் ஸ்டார் பிம்பத்தை உடைத்து விட்டால், ஈஸியாக இவரால் தமிழ்நாட்டில் நிலைத்து விட முடியும் என்ற எண்ணம் நாளுக்கு நாள் மேலோங்கி வருகிறது.

Also read: அஜித்தை பத்தி இனி யாரும் வாயைத் திறக்க கூடாது.. அரசியல் லாபத்திற்காக விஜய் போட்ட கண்டிஷன்

அடுத்ததாக தமிழ்நாட்டின் ஒரே சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று வந்துவிட்டால், அது இவருக்கு கிடைத்த ஓட்டு ஆக கூட மாறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்று யோசித்து இருக்கிறார். இதனால் அதிரடியான சில விஷயங்களை இவருடைய ரசிகர்களிடம் பேசி தெளிவாக்கி விட்டார். அதாவது இனி எப்பொழுதும் போல அஜித்தை போட்டியாக நினைக்க வேண்டாம்.

இனிமேல் நம்முடைய டார்கெட் முழுவதும் ரஜினி தான். அவரை விட நான் தான் பெரிய ஆளாகி சூப்பர் ஸ்டார் பட்டம் என்னை தேடி வர வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதற்கான வேலைகளை செய்து மக்கள் மத்தியில் அழுத்தமாக பதிவிடுங்கள் என்று ரசிகர்களுக்கு புது திட்டத்தை கூறியுள்ளார்.

Also read: நெல்சனை வைத்து பக்காவாக காய் நகர்த்திய ரஜினிகாந்த்.. இந்த 3 படங்களையும் ஓரங்கட்டிய ஜெயிலர்

எப்படியாவது ரஜினியை விட பெரிய ஆளாகி காட்ட வேண்டும் என்பதற்காகத் தான் விஜய் சமூக சேவை செய்யும் விதமாக பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்திருக்கிறார். இதற்கு அடுத்து அரசியல் சம்பந்தமாக தமிழ்நாடு முழுவதும் ராகுல் காந்தி மாதிரி பாதயாத்திரை போவதற்கு திட்டமிட்டு இருக்கிறார்.

விஜய் இந்த மாதிரி எல்லாம் விஷயங்கள் செய்வது அறிந்து தான் ரஜினி, கோபத்தில் ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் நான் மட்டும் தான். என அவர் பங்கிற்கு விஜய்க்கு சரியான பதிலடி கொடுக்கும் விதமாக அவருடைய பாட்டை போட்டு இருக்கிறார். ஆக மொத்தத்தில் விஜய் என்னதான் கட்டம் கட்டினாலும் இவருடைய பாட்ஷா எல்லாம் சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் பலிக்காது.

Also read: வளர்த்து விட்டவரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.. விஜய்க்கு மண்டையில் கொட்டுவைத்து புத்திமதி சொன்ன தயாரிப்பாளர்

Trending News